‘போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..!

போத’ படத்தில்  ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..!

என் அப்பா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்… நான் நடிகனாகிவிட்டேன் ! – சொல்கிறார் “போத”  பட நாயகர்  விக்கி..!

“போத”  படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார்  ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி.

சின்ன வயது முதலே எனக்கு  சினிமாவில் நடிக்க ஆசை… எனும் விக்கிக்கு., அதிலும்  கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க ரொம்பவும் ஆசை. காரணம் .அவரது தந்தை   ராஜசேகர் .

பல வருடங்களுக்கு முன் ‘எத்தனை மனிதர்கள்’ உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என்  தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை … எனது ஆசை மற்றும் லட்சியமானது.. என்கிறார் விக்கி!

அதன் விளைவு ., சென்னைக்கு

காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த விக்கி .,  பெசன்ட் நகரில் உள்ள “ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ ” எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில்    நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடி இருக்கிறார்.

“வடகறி ” , “அச்சமில்லை அச்சமில்லை” , “நிலா ” உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும் , பெரிதுமான ரோல்களில் நடித்த படி ., தான் நடிப்பு கற்றுக் கொண்ட, பெசன்ட் நகர், “ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ ” ஆக்டிங் ஸ்கூலிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு  கற்றுத் தந்தபடி ., கோடம்பாக்கத்தையே வலம் வந்தவருக்கு நண்பர்  கணேஷ்  மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில்  “போத” பட வாய்ப்பு கிட்டியிருக்கிறது .

ஆமாம் ., விக்கிக்கு ., இப்படத்தில்  “ஆண் பாலியல் தொழிலாளி ” வேடமாமாமே ? எனக் கேட்டால் ., “அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே சார் ., மொத்த ஸ்க்ரிப்டிலும்,  சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு… என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர்…. படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் “போத” படத்தை  . பேமிலியா போய் பார்க்கலாம் சார் … “என கேரண்டி சொல்கிறார் விக்கி. அதையும் பார்ப்போமே!



 


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *