நகுலின் ‘செய்’ படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர்

நகுலின் ‘செய்’ படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
 
நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி. ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா….’ பாடலை பாடியுள்ளார். கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னிதயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியிருக்கும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. ‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.
 
 The renowned pakistani singer and composer Atif ali have made his debut in tamil industry through a soulful sufi track ‘Iraiva’ for the nakkhul starrer Sei. Known for his voice, Atif has rendered several bollywood and pakistani tracks. He is also the composer for the upcoming movie julie 2 starring rai laxmi. Its a first time a pakistani singer got so interested  in tamil and expressed his love for the language. The song is co-sung by hindustani singer sapataswara rishu. The makers have comfirmed that this sufi based song is going to be a heart touching song and here to stay in listeners mind for a long time. The music has been done by Nyx Lopez and lyrics by Yugabharathi. The album also features seasoned singers like  Shankar Mahadevan, Sonu nigam, Shreya goshal, Benny dayal, Chinnaponnu and debutant Geethanjali .The movie is produced by Mannu and Umesh under the banner of Trippy Turtle Productions . Sei will be releasing worldwide on December 8th.
 
 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *