*உலக* *நீரிழிவு* *தினத்தை* *முன்னிட்டு**, **ஸ்வாமி* *விவேகானந்தர்* *இல்லம்**,
**நீல* *நிற* *விளக்குகளால்* *அலங்கரிப்பு*
· *உலக* *நீரிழிவு* *தினத்தை* *குறிக்கும்* *வகையில்* *தொடர்ந்து** 9 *
*ஆண்டுகள்* *சாதனை**.*
· *லட்சக்கணக்கான* *நீரிழிவு* *பாதிக்கப்பட்ட* *மக்கள்* *குறிப்பாக*
*பெண்களுக்கு* *நம்பிக்கை* *தருகிறது**.*
*சென்னை**, 13**ஆம்* *நவம்பர்**, 2017: *இந்தியாவில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக
பல்வேறு அடையாள சின்னங்களை நீல நிறத்தில் ஒளியூட்டி சாதனை படைத்து வரும், *எம்**.
**வி**. **நீரிழிவு* *மருத்துவமனை**, **இராயபுரம்*, இந்த ஆண்டு, உலக நீரிழிவு
நாளை முன்னிட்டு இன்று, சென்னையில் உள்ள ஸ்வாமி விவேகானந்தர் இல்லத்தினை
ஒளியேற்றியது. இக்காட்சி நிகழ்ச்சியானது, நீரிழிவு மற்றும் அதன் விளைவுகள்
குறித்து ஒரு வலுவான காட்சி அமைப்பாக விளங்கியதுடன், சென்னை பொது மக்களிடையே
குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு, “பெண்கள் மற்றும் நீரிழிவு-
ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான எங்கள் உரிமை” என்கின்ற கருத்தின் அடிப்படையாக
கொண்டு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 199 மில்லியன் க்கும் அதிகமான பெண்கள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 2040
ஆம் ஆண்டில் 313 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலின
தாக்கம் மற்றும் சமூக இயக்கவியல் தாக்கங்களால் நீரிழிவு நோய் அதிகமான பாதிப்பை
ஏற்படுத்துகிறது. பாலின மற்றும் சமூக இயக்கவியல் தாக்கங்களால் நீரிழிவு நோய்
அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை, பெண்களுக்கான சுகாதார சேவை
வாய்ப்புக்கள் மற்றும் சுகாதார நலன் விருப்பங்களை பாதிக்கிறது. மேலும்
பெண்களிடையே நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது.
டாக்டர் விஜய் விஸ்வநாதன், தலைவர் மற்றும் தலைமை நீரிழிவு மருத்துவர், எம்.வி.
நீரிழிவு மருத்துவமனை மற்றும் பேரா. எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம்,
இராயபுரம் கூறும் போது, பேரா. எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின்
ஆய்வுகளின் படி, இந்தியாவில், பெண்களிடையே நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவதில்
ஆண்களை விட பின் தங்கி உள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு வருடமும், உலக நீரிழிவு தினத்தன்று எம். வி. நீரிழிவு மருத்துவமனை,
இராயபுரம் நகரின் முக்கிய நினைவு கட்டிடங்களை தேர்வு செய்து அவற்றை நீல
நிறத்தில் ஒளியேற்றம் செய்து வருகின்றார்கள். கணக்காய்வாளர் அலுவலகம்
…