SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்
காணவேவந்தேன்-2019- நிகழ்வின் அறிக்கை
SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் சார்பாக மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் “காணவேவந்தேன் -2019” என்ற பெயரில்,பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளாக கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிதைப்போட்டி, சொல் விளையாட்டு போன்ற போட்டிகள் 14.09.19 சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக, இலக்கியப் பேச்சாளரும் திரைப்பட நடிகருமான நாவுக்கரசர் உயர்திரு நாஞ்சில் சம்பத் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் இது போன்ற தமிழ் நிகழ்வை நடத்தும் உங்களுக்கு நான் வள்ளல் பாரியாக இருந்திருந்தால் தேரை கொடுத்திருப்பேன்; குமணவள்ளலாக இருந்திருந்தால் என் தலையை கொடுத்திருப்பேன்; ஆனால் என்னிடம் தமிழ் தான் இருக்கிறது,அந்த தமிழையே தந்து விடுகிறேன் என்று கூறினார்.மேலும் தமிழ் தான் அனைத்திற்கும் மூத்த மொழி என்றும், நாம் இக்காலத்தில் தேநீரை சூடாக வைக்க பயன்படுத்தும் குடுவையை அக்காலத்திலேயே நம் தமிழர்கள் அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என தமிழின் பெருமையையும்,தமிழர்களின் பெருமையையும் எடுத்துரைத்தார்.
காணவேவந்தேன்-2019 நிகழ்வானது, SRM வள்ளியம்மைபொறியியல் கல்லூரியின் இயக்குநரும், மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழத்தின் இணைத்துணை வேந்தருமான முனைவர்.தி.பொ.கணேசன் ஐயா அவர்கள் தலைமையில் மற்றும் SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர், முனைவர். பா.சிதம்பரராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் நிகழ்வானது நடைபெற்றது.
SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர், முனைவர். ம.முருகன் அவர்கள் போட்டிகளின் துவக்க விழாவில் முன்னிலையுரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் நிகழ்வில், பாரிவேந்தர் மாணவ மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு. க.சண்முகம் அவர்கள் அறிமுக உறையாற்றினார்.
SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் தொடர்பியல் துறை பொறியியல் துறை மாணவன் க.சங்கர்பாபு அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியாக மாணவன் கு.சங்கரதாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற மாணவர்கள் பல்வேறு போட்டிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் விவரங்கள் மற்றும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய தொகுப்பினை சிறப்புமலராக வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியை சி.ஷாலினி மற்றும் ஜெ.தர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்வில் 284 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் உள் கல்லூரியில் இருந்து 197 மாணவ, மாணவிகளும், வெளிக்கல்லூரிகளில் இருந்து 87 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.