எஸ் ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 4 நாட்கள் ஆரூஷ் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா- இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கினார

எஸ் ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 4 நாட்கள் ஆரூஷ் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா- இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கினார்

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 4 நாட்கள் நடைபெறும் ஆருஷ் என்கிற தேசிய அளவிலான  தொழில்நுட்ப மேலாண்மை ன திருவிழாவை இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார்.

நாட்டில் உயர்கல்வி வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாணவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் வகையில் ஆராய்ச்சி பணிகளுக்கு .நவீன ஆய்வகங்கள் அமைத்து அதிக அளவில் நிதி ஒதுக்கி ஊக்கம் அளித்து வருகிறது. மேலும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வெளிக்கொண்டு வரும் வகையில் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவை நடத்தி வருகிறது.

அதன்படி  எஸ்ஆர்எம்  கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் ஆரூஷ் என்கிற அறிவியல் பொறியியல் மற்றும் மேலாண்மை தொழில்நுட்ப திருவிழா தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு இதனை முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தொடங்கி வைத்தார்.13 வது ஆண்டாக இன்று முதல் 29 ந்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த தொழில்நுட்பம் திருவிழாவில் நாடு முழுவதுமிருந்து  கல்லூரிகள ,பல்கலைகழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த 1000 பேர் என சுமார் 60 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆருஷ் தொழில்நுட்ப  திருவிழாவில் வடிவமைப்பு கண்டுபிடிப்பு கருத்தரங்கம் தொழில்நுட்ப அரங்குகள் நிக்கான் ஸ்பேஸ் ஆட்டோ டெஸ்க் போக்ஸ் ஆரக்கல் ஐபியம் மைக்ரோசாப்ட் அசூர் சம்பந்தப்பட்ட   பணிமனைகள் என 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

ஆரூஷ் திருவிழா தொடக்க விழா காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை ஆருஷ் மாணவர் செயலாளர் திவேஷ் கே.நர்வாணி வரவேற்றார், ஆருஷ் திருவிழா பற்றி மாணவர் இணை செயலாளர் கணேஷ் அபிஷேக் விளக்கி கூறினார்.

நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாராயணன் தலைமை வகித்து பேசியதாவது

ஆருஷ் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா மாணவர்களிடையே அறிவை வளர்த்து கொள்ள வும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகத்தை அதிகபடுத்தும்.தற்போது ஆருஷ் நிகழ்வு சர்வதேச அளவில் கொண்டு செல்ல் வேண்டும். கண்டுபிடிப்பு உங்களை வெற்றிக்கு கொண்டு செல்லும் கண்டுபிடிப்புகள் மெய்த்தண்மையை பிரதிபளிக்கும் இந்த திருவிழா மாணவர்களுக்கு மட்டுமின்றி நிறுவனத்துக்கும் உதவும்.மேலும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தேசிய அளவில் விளையாட்டு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது என்றார்.

விழாவில் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி வி.நடராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் 

நிகழ்ச்சியில் இன்று ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிறது இவை அனைத்தும் மணிதனால் உருவாகிறது.மருத்துவ துறையில் ஏராளமான முன்னேற்றங்கள் உருவாகியுள்ளது. நோயாளிகளுக்கு   மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையை தகவல் தொழில்நுட்ப வசதி மூலம

மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி உருவாகியுள்ளது.வின்வெளி ஆராய்ச்சி இன்று பல புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது இதற்கு புதிய கண்டுபிடிப்பு திறமைகளே என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆருஷ் சிறப்பு மலரினை வெளியிட்டு ஆரூஷ் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவை தொடங்கி வைத்துபேசியதாவது

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம்    புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க நடத்தப்படும் இந்த திருவிழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. கல்லூரி வாழ்க்கை உங்களை சாதனையாளர்களாக உருவாக்க உதவும் அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் ஆருஷ் திருவிழாவின் அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஏ.ரத்தினம் தகவல்தொடர்பு இயக்குனர் ஆர்..நந்தகுமார் வளாக இணை இயக்குனர் முனைவர் திருமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் ஆருஷ் மாணவர் அமைப்பாளர் சந்தீபன் தாஸ்குப்தா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *