டைட்டனின் ப்ரத்யேக தமிழ்நாடு கைக்கடிகார கலெக்‌ஷன் அறிமுகம்

டைட்டனின் ப்ரத்யேக தமிழ்நாடு கைக்கடிகார கலெக்‌ஷன் அறிமுகம்!

காலத்திற்கும் அப்பாற்பட்ட தமிழகத்தின் கலாச்சாரம், இலக்கியம், கட்டிடக் கலை ஆகியவற்றின் அழகியலால் ஈர்க்கப்பட்டு அதைப் பிரதிபலிக்கும்விதமாக இந்த புதிய ’தமிழ்நாடு கைக்கடிகாரத் தொகுப்பு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, நவம்பர் 14, 2019:- இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான கைக்கடிகார ப்ராண்ட் ஆன டைட்டன், “நம்ம தமிழ்நாடு கலெக்ஷன்” [The Namma Tamil Nadu Collection] என்ற பெயரில் புதிய கைக்கடிகாரத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. அழகியலை வெளிப்படுத்தும் வகையில் கலை நுணுக்கத்துடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரங்கள் தமிழ்நாட்டின் கலாச்சார செழுமையினை பிரதிபலிக்கிறது. இந்த தொகுப்பு, டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த் [Ms. Revathi Kant – Chief Design Officer, Titan Company Limited], பிரபல நாட்டியக் கலைஞர் மற்றும் திரைப்பட நடிகையான ஷோபனா சந்திரகுமார் பிள்ளை ஆகியோரால் சென்னை தாஜ் கன்னிமரா நட்சத்திர ஹோட்டலில் உற்சாகமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஷோபனா-வின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய கடிகாரங்கள் தமிழ்நாட்டின் மொழி, கலை மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் பிரதிபலிக்கும் வகையில் ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கண்கவரும் கோவில் கட்டிடக் கலை, நுட்பமான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளின் கலைநுணுக்கம், தனித்துவம் வாய்ந்த தமிழ் எழுத்துகள் என இந்த புதிய கைக்கடிகாரத் தொகுப்பு தமிழ்நாட்டின் சிறப்பை அழகியலுடன் வெளிப்படுத்துகின்றன. காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளில் இடம்பெறும் அன்னப் பறவை, கோவில் மேற்புரத்தில் இடம்பெற்றிருக்கும் தாமரை வடிவங்கள், யாழி சிற்பங்களுடன் கூடிய தூண்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த கைக்கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடிகாரத்தில் மணி நேரமானது, இதுவரை இல்லாத வகையில் தமிழ் எழுத்துகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கைக்கடிகாரங்கள் கலைநுணுக்கத்துடன், நேர்த்தியையும் கலந்து நவீன காலத்திற்கு ஏற்ற சிறந்த படைப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த், “1988-ம் ஆண்டில் தொடங்கிய தமிழ்நாட்டிற்கும் எங்களுக்குமான உறவு மிகவும் ஆழமானது. பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடரும் எங்களது பயணத்தில், தமிழகத்தின் பாரம்பரியத்தையும் வளமான கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையிலான கைக்கடிகாரத் தொகுப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தத் தொகுப்பானது தமிழ்நாட்டின் தற்கால மரபுக்கு மதிப்பளிக்கிறது. மேலும் இதன் வடிவமைப்பானது தமிழ்நாட்டின் தனித்துவமான கோவில் கட்டடக் கலை, தமிழ் எழுத்துகள், பல்வேறு கலைகளின் மையக் கருத்து ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டின் மீதான எங்களது அன்பைக் கொண்டாட இதுவொரு சிறிய வாய்ப்பு.” என்றார்.

டைட்டன் கைக்கடிகாரங்களின் சந்தைப்படுத்துதல் பிரிவுத் தலைவர் கன்வல்ப்ரீத் வாலியா [Ms. Kanwalpreet Walia, Head of Marketing, Titan Watches] பேசுகையில், “டைட்டனின் வெற்றிகரமான பயணத்தில் தமிழ்நாடு தனக்கென்று ஒரு சிறப்பிடத்தை தக்க வைத்திருக்கிறது. மேலும் தமிழ்நாடு எங்களுக்கு மிக முக்கிய சந்தை ஆகும். எங்களது சில்லறை விற்பனை நிலையங்களின் செயல்பாடுகள் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் பரவலாக இருப்பதால், தமிழகத்தில் நாங்கள் வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறோம். இது நாங்கள் வெளியிடும் மிகச் சிறப்பான கைக்கடிகாரத் தொகுப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டின் கலை மற்றும் தமிழக மக்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக, தமிழ் மக்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் மதிப்பின் வெளிப்பாடாக ’தமிழ்நாடு கைக்கடிகாரத் தொகுப்பை’ நாங்கள் வெளியிடுகிறோம்.” என்றார்.

இந்த கைக்கடிகாரத் தொகுப்பானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஏழு வெவ்வேறு கலை அம்சங்களுடனான கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தக் கைக்கடிகாரங்கள் பல்வேறு நுட்பங்களைக் கொண்டு கலை வடிவத்துடனான கடிகார முகங்களை (டயல் – dial) வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்டீரியல் ஃப்யூஷன், எம்பாசிங், 3 டி ஃபார்மிங், க்னர்லிங் (material fusion, embossing, 3D forming and knurling) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கோல்ட், ரோஸ் கோல்ட் மற்றும் ஸ்டீல் பூச்சுகளில் கிடைக்கும் இந்தக் கடிகாரங்களின் ஆரம்ப விலை ரூ. 4495 என்ற விலையில் தொடங்கி ரூ. 6995 வரையில் பல்வேறு விலைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த தமிழ்நாடு தொகுப்பானது Titan.co.in என்ற இணையதளத்திலும், வோர்ல்டு ஆஃப் டைட்டன் விற்பனை நிலையங்களிலும்,தமிழ்நாட்டில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பூர்வ டீலர்களிடமும் கிடைக்கும்.

டைட்டன் நிறுவனம் பற்றி….:

டைட்டன் நிறுவனம் (முன்பு டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என்று அழைக்கப்பட்டது) தமி்ழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.டைட்டன் வாட்சஸ் (கடிகாரங்கள்) என்ற பெயரில் இது 1987-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. 1994-ம் ஆண்டு டைட்டன் நிறுவனம் நகைப் பிரிவிலும் காலடி எடுத்து வைத்தது. பின்னர் டைட்டன் ஐ ப்ளஸ் என்ற பெயரில் கண் கண்ணாடிகள் பிரிவிலும் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கியது. 2013-ம் ஆண்டு நறுமணப் பொருட்கள் பிரிவில் ஸ்கின்ன் (Sடைட்டனின் ப்ரத்யேக தமிழ்நாடு கைக்கடிகார கலெக்‌ஷன் அறிமுகம்!

காலத்திற்கும் அப்பாற்பட்ட தமிழகத்தின் கலாச்சாரம், இலக்கியம், கட்டிடக் கலை ஆகியவற்றின் அழகியலால் ஈர்க்கப்பட்டு அதைப் பிரதிபலிக்கும்விதமாக இந்த புதிய ’தமிழ்நாடு கைக்கடிகாரத் தொகுப்பு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, நவம்பர் 14, 2019:- இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான கைக்கடிகார ப்ராண்ட் ஆன டைட்டன், “நம்ம தமிழ்நாடு கலெக்ஷன்” [The Namma Tamil Nadu Collection] என்ற பெயரில் புதிய கைக்கடிகாரத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. அழகியலை வெளிப்படுத்தும் வகையில் கலை நுணுக்கத்துடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரங்கள் தமிழ்நாட்டின் கலாச்சார செழுமையினை பிரதிபலிக்கிறது. இந்த தொகுப்பு, டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த் [Ms. Revathi Kant – Chief Design Officer, Titan Company Limited], பிரபல நாட்டியக் கலைஞர் மற்றும் திரைப்பட நடிகையான ஷோபனா சந்திரகுமார் பிள்ளை ஆகியோரால் சென்னை தாஜ் கன்னிமரா நட்சத்திர ஹோட்டலில் உற்சாகமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஷோபனா-வின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய கடிகாரங்கள் தமிழ்நாட்டின் மொழி, கலை மற்றும் கலாசாரம் ஆகியவற்றின் பிரதிபலிக்கும் வகையில் ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கண்கவரும் கோவில் கட்டிடக் கலை, நுட்பமான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளின் கலைநுணுக்கம், தனித்துவம் வாய்ந்த தமிழ் எழுத்துகள் என இந்த புதிய கைக்கடிகாரத் தொகுப்பு தமிழ்நாட்டின் சிறப்பை அழகியலுடன் வெளிப்படுத்துகின்றன. காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளில் இடம்பெறும் அன்னப் பறவை, கோவில் மேற்புரத்தில் இடம்பெற்றிருக்கும் தாமரை வடிவங்கள், யாழி சிற்பங்களுடன் கூடிய தூண்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த கைக்கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடிகாரத்தில் மணி நேரமானது, இதுவரை இல்லாத வகையில் தமிழ் எழுத்துகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கைக்கடிகாரங்கள் கலைநுணுக்கத்துடன், நேர்த்தியையும் கலந்து நவீன காலத்திற்கு ஏற்ற சிறந்த படைப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த், “1988-ம் ஆண்டில் தொடங்கிய தமிழ்நாட்டிற்கும் எங்களுக்குமான உறவு மிகவும் ஆழமானது. பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடரும் எங்களது பயணத்தில், தமிழகத்தின் பாரம்பரியத்தையும் வளமான கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையிலான கைக்கடிகாரத் தொகுப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தத் தொகுப்பானது தமிழ்நாட்டின் தற்கால மரபுக்கு மதிப்பளிக்கிறது. மேலும் இதன் வடிவமைப்பானது தமிழ்நாட்டின் தனித்துவமான கோவில் கட்டடக் கலை, தமிழ் எழுத்துகள், பல்வேறு கலைகளின் மையக் கருத்து ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டின் மீதான எங்களது அன்பைக் கொண்டாட இதுவொரு சிறிய வாய்ப்பு.” என்றார்.

டைட்டன் கைக்கடிகாரங்களின் சந்தைப்படுத்துதல் பிரிவுத் தலைவர் கன்வல்ப்ரீத் வாலியா [Ms. Kanwalpreet Walia, Head of Marketing, Titan Watches] பேசுகையில், “டைட்டனின் வெற்றிகரமான பயணத்தில் தமிழ்நாடு தனக்கென்று ஒரு சிறப்பிடத்தை தக்க வைத்திருக்கிறது. மேலும் தமிழ்நாடு எங்களுக்கு மிக முக்கிய சந்தை ஆகும். எங்களது சில்லறை விற்பனை நிலையங்களின் செயல்பாடுகள் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் பரவலாக இருப்பதால், தமிழகத்தில் நாங்கள் வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறோம். இது நாங்கள் வெளியிடும் மிகச் சிறப்பான கைக்கடிகாரத் தொகுப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டின் கலை மற்றும் தமிழக மக்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக, தமிழ் மக்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் மதிப்பின் வெளிப்பாடாக ’தமிழ்நாடு கைக்கடிகாரத் தொகுப்பை’ நாங்கள் வெளியிடுகிறோம்.” என்றார்.

இந்த கைக்கடிகாரத் தொகுப்பானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஏழு வெவ்வேறு கலை அம்சங்களுடனான கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தக் கைக்கடிகாரங்கள் பல்வேறு நுட்பங்களைக் கொண்டு கலை வடிவத்துடனான கடிகார முகங்களை (டயல் – dial) வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்டீரியல் ஃப்யூஷன், எம்பாசிங், 3 டி ஃபார்மிங், க்னர்லிங் (material fusion, embossing, 3D forming and knurling) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன. கோல்ட், ரோஸ் கோல்ட் மற்றும் ஸ்டீல் பூச்சுகளில் கிடைக்கும் இந்தக் கடிகாரங்களின் ஆரம்ப விலை ரூ. 4495 என்ற விலையில் தொடங்கி ரூ. 6995 வரையில் பல்வேறு விலைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த தமிழ்நாடு தொகுப்பானது Titan.co.in என்ற இணையதளத்திலும், வோர்ல்டு ஆஃப் டைட்டன் விற்பனை நிலையங்களிலும்,தமிழ்நாட்டில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பூர்வ டீலர்களிடமும் கிடைக்கும்.

டைட்டன் நிறுவனம் பற்றி….:

டைட்டன் நிறுவனம் (முன்பு டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என்று அழைக்கப்பட்டது) தமி்ழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.டைட்டன் வாட்சஸ் (கடிகாரங்கள்) என்ற பெயரில் இது 1987-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. 1994-ம் ஆண்டு டைட்டன் நிறுவனம் நகைப் பிரிவிலும் காலடி எடுத்து வைத்தது. பின்னர் டைட்டன் ஐ ப்ளஸ் என்ற பெயரில் கண் கண்ணாடிகள் பிரிவிலும் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கியது. 2013-ம் ஆண்டு நறுமணப் பொருட்கள் பிரிவில் ஸ்கின்ன் (SKINN) என்ற பெயரில் நுழைந்தது. 2019-ம் ஆண்டில் தனைரா என்ற சேலைகள் பிரிவைுயும் தொடங்கியுள்ளது. தற்போது டைட்டன் நிறுவனம் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப கடிகாரங்கள், நகைகள் மற்றும் கண் கண்ணாடிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குகிறது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் டைட்டன் நிறுவனம் ரூ. 19,070 கோடி வருவாயைப் பெற்றுள்ளது.

For media queries, contact:

Jai Shankar

Adfactors PR

KINN) என்ற பெயரில் நுழைந்தது. 2019-ம் ஆண்டில் தனைரா என்ற சேலைகள் பிரிவைுயும் தொடங்கியுள்ளது. தற்போது டைட்டன் நிறுவனம் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப கடிகாரங்கள், நகைகள் மற்றும் கண் கண்ணாடிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குகிறது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் டைட்டன் நிறுவனம் ரூ. 19,070 கோடி வருவாயைப் பெற்றுள்ளது.

For media queries, contact:

Jai Shankar

Adfactors PR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *