சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு 12.12.2019 கிருஷ்ணகிரி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் ஜீவா பங்கேற்பு மாவட்ட செயலாளர்
கே .வி .ஸ்ரீநிவாசன் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கட்டப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான சிறு பாலங்களை ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா மக்கள் பயன்பாட்டிருக்காக திறந்து வைத்தார் . மேலும் நடிகர் ஜீவா அரசு பொது மருத்துவமனையில் 12.12.2019 அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து வாழ்த்தினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் ,மூன்று சக்கர சைக்கிள்கள் சலவைத்தொழிலாளர்களுக்கு இஸ்திரிப்பெட்டிகள் ,தையல் இயந்திரங்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது ,
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கோதானம் வழங்கப்பட்டது
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது