விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிடியூட்
பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டியை நடத்தியது
சென்னை, 21 டிசம்பர் 2019:சென்னை விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிடியூட், 5 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை வெவ்வேறு தலைப்புகளின் கீழ் ஏற்பாடு செய்தது. இந்த ஓவியப்போட்டி சிறு குழந்தைகளின் மனதில் கைவினைப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கலைத்துறையில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்றது. இதில் சென்னை முழுவதும் இருந்து சுமார் 500 பள்ளி மாணவர்கள் பங்கேற்று போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்
இப்போட்டி 5 வயது முதல் 9 வயது, 10-13 வயது மற்றும் 14 – 17 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில் முதல் மூன்று சிறந்த ஓவிங்களை தேர்ந்தெடுத்து, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டன. மேலும் ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டியில் சென்னை, அரசு நுண்கலைக் கல்லூரியின் ஓவியப் பேராசிரியரும், புகழ்பெற்ற கலைஞருமான திரு. கே. புகாஜெந்தி அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். இந்த விழாவிற்கு தற்போதைய நிர்வாகி நீதிபதி திரு. பி.சண்முகம் தலைமை தாங்கினார்,
நிகழ்ச்சியில் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிடியூட்-ன் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. கே. சுவாதி பேசுகையில், தற்போது அற்புதமான கைவினைப் பொருட்களின் முக்கியத்துவம் மெதுவாக மறைந்து வருகிறது. மாணவர் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திறமையான கைவினைஞரால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் கட்டுரைகளை சந்தைப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.