கடந்தமுறை டெல்லி விவசாய போராடடத்தின் போது அறிமுகமான இளங்கீரன் அண்ணா …தமிழகம் முழுவதும் தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்ட களக்களில் குரல் கொடுப்பவர்….
இளங்கீரன் அண்ணன் என்னை சமீபத்தில தொடர்புகொண்டு மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவ கேட்டுக்கொண்டார்….
விவசாயிகளுக்கு உணவளிக்கவே முழுவீச்சாக செயல்படுவதால் இதற்கு யாரை அணுகுவது என்று யோசித்த வேளையில் நடிகர் திரு.விமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.கே . செல்வா சகோ என்னை அரசு பிலிம்ஸ் உரிமையாளர் திரு. கோபி அவர்களிடம் அறிமுகபடுத்தினார்….
அவரிடம் அறிமுகமாகி மூன்று நிமிடம் மட்டுமே பேசியநிலையில் உடனடியாக விவசாயி மகளின் திருமண உதவியை பற்றி பேசினேன் …. பேசிய மூன்று வினாடியில் உடனே ஒகே… எனக்கூறி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்…
விவரம் எதுவுமே கேட்கவில்லை…. உடனடியாக இளங்கீரன் அவர்களை தொடர்பு கொண்ட பேசினேன்.. திருமாங்கல்யம் அன்பளிப்பாக வழங்க முடிவு செய்யப்ட்டது… உடனடியாக கல்யாண் ஜீவல்லரி சென்று அவர்கள் விரும்பிய வடிவில் திருமாஙகலயம் எனது அம்மா கரங்களால் வாங்கப்டடது..
திருமாங்கல்ய செலவு போக மீதிதொகை விவசாயிகளின் நேற்றைய ஒருநாள் உணவுக்காக செலவளிக்கப்பட்டது……
.
கேரளாவில் உள்ள ஒரு முதியோர் இலலத்திற்கு ஓணம் சமபந்தி விருந்திற்கு சிறப்பு விருந்திராக செல்ல வேண்டி இருந்ததால் எனது தந்தை திரு.ராஜேந்திர பாண்டியன் எனது மற்றும் திரு.கோபி அவர்கள் சார்பில் மன்னார்குடி நேரடியாக சென்று மணமகளிடம் திருமாங்கல்யம் அளித்து மேலும் மணமக்களுக்கு பட்டுசேலை வேஷ்டியுடன் ஆசியளித்து திரும்பினார்…
ஆக ஒரு விவசாயி அவர்களின் மகளுடைய திருமணசெலவிற்கு உடனடியாக உதவி செய்ய உதவிய
திரு. இளங்கிீரன் அண்ணா
திரு. கே.எஸ்.கே . செல்வா
திரு. கோபி அரசுபிலிம்ஸ்
திரு . ரவீந்தர்
திரு.ராஜேந்திர பாண்டியன்
மற்றும் மண்ணின் மைந்தர்கள்..
அவைருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்…
கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் உணவு மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ நிதி உதவி மற்றும் விவசாயத்திற்கு தேூவயான உதவிகள் என நா் கேட்டவுடன்தொடர்ந்து நிதி உதவி அளித்துவரும் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்….
அன்புடன்
அபிசரவணன்…