JEE மெயின்ஸ் 2020 தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி மகிழும் ஆகாஷ்

JEE மெயின்ஸ் 2020 தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி மகிழும் ஆகாஷ்
சென்னை மாநகரைச் சேர்ந்த, ஆகாஷ் நிறுவனத்தில் பயின்ற 14 மாணவர்கள் 98 நூற்றுமானத்தை பெற்றிருக்கையில் சென்னையின் சூரஜ் ஶ்ரீனிவாசன் 99.99 நூற்றுமானத்தை பெற்று சாதனை படைத்திருக்கிறார்
ஆகாஷ் எஜூகேஷன் சர்வீசஸ் லிமிடெட்-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஜே. சி. சௌத்ரி, சென்னையில் உள்ள அடையார் கிளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சாதனைபடைத்த மாணவர்களை பாராட்டினார்
சாதனை படைத்த 14 மாணவர்களுள் 4 நபர்கள் 99 மற்றும் அதற்கு மேற்பட்ட நூற்றுமானத்தை பெற்றிருக்கையில் எஞ்சிய மாணவர்கள் 98 மற்றும் அதற்கும் மேற்பட்ட நூற்றுமானத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்

 

 

சென்னை, 28 ஜனவரி 2020: தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதற்கான சேவைகள் துறையில் தேசிய அளவில் முதன்மை வகிக்கும் ஆகாஷ் எஜூகேஷன் சர்வீசஸ் லிமிடெட் (AESL), சென்னையில் இயங்கிவரும் ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் பல்வேறு கிளைகளில் பயின்று சிறப்பான தேர்ச்சி பெற்ற சாதனை மாணவர்களை இன்று பாராட்டி மகிழ்ந்தது. ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் அடையார் கிளையில் நடைபெற்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வில் ஆகாஷ் எஜூகேஷன் சர்வீசஸ் லிமிடெட்-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஜே. சி. சௌத்ரி, சாதனை படைத்த 15 மாணவர்களை பாராட்டி கௌரவித்தார்.
சிறப்பான தேர்ச்சி பெற்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த திரு. சூரஜ் ஶ்ரீனிவாசன் என்ற மாணவர். கௌரவமிக்க, மிகக் கடினமான JEE மெயின்ஸ் 2020 தேர்வில் 99.99 நூற்றுமானம் (percentile) எடுத்து சென்னை மாநகரையும் மற்றும் ஆகாஷ் இன்ஸ்டியூட்டையும் பெருமைப்பட வைத்திருக்கிறார்.
அவர் மட்டுமல்லாது 14 பிற மாணவர்களும் சென்னையிலிருந்து ஆகாஷ் இன்ஸ்டியூட்டில் பயின்று இதே தேர்வில் 98 மற்றும் அதற்கும் அதிகமான நூற்றுமானத்தை பெற்றிருக்கின்றனர். குறிப்பிடத்தக்க இந்த சாதனையானது ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் பாடத்திட்டம், பயிற்சியளிப்பு மற்றும் ஆசிரியர்களின் திறனை வலுவாக எடுத்தியம்புகிறது.
சாதனை படைத்த 14 மாணவர்களுள் 4 நபர்கள் 99 மற்றும் அதற்கும் அதிகமான நூற்றுமானத்தைப் பெற்ற சாதனை மாணவர்கள் கீழ்வருமாறு: இஷான் அகர்வால் (99.80 நூற்றுமானம்), ஷேரன் ஏ (99.55 நூற்றுமானம்), சிவம் ருஹில் (99.23 நூற்றுமானம்), மற்றும் சோனேஷ் குமார் (99.02 நூற்றுமானம்).
இந்த சிறப்பான தேர்வு முடிவுகள் மற்றும் தேர்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்ததோடு சாதனைபடைத்த மாணர்வகளை பாராட்டிய ஆகாஷ் எஜூகேஷன் சர்வீசஸ் லிமிடெட்-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஜே. சி. சௌத்ரி கூறியதாவது: “99.99 என்ற மிக உயர்ந்த நூற்றுமானத்தை பெற்றிருக்கும் சூரஜ் ஶ்ரீனிவாசன் குறித்து நாங்கள் பெருமைகொள்கிறோம். அத்துடன், இன்னும் பல மாணவர்கள் 98 மற்றும் அதற்கும் அதிகமான நூற்றுமானத்தை JEE மெயின்ஸ் 2020-ல் பெற்று தேர்ச்சியடைந்திருக்கின்றனர். மாணவர்களது கடுமையான உழைப்பு, அதிக கூர்நோக்கம் கொண்ட எங்களது கல்வி பாடத்திட்டங்கள், திறமைமிக்க ஆசிரியர்கள் மற்றும் தரமான தேர்வு மதிப்பீடுகள் ஆகியவையே இந்த சாதனையை எட்டுமாறு இந்த மாணவர்களை ஏதுவாக்கியிருக்கிறது. JEE மெயின்ஸ் 2020 தேர்வில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றிருக்கிற எமது அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களது எதிர்கால செயல்முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி காண அவர்களை வாழ்த்துகிறேன்.”
இரவென்றும் பாராமல், கடுமையாக விடா முயற்சியோடு படிப்பதற்கான தங்களது முயற்சியை, ஆகாஷ் நிபுணர்களால் வழங்கப்பட்ட மிக நேர்த்தியான கற்பித்தல் மற்றும் பாடத்திட்ட உபகரணங்கள் ஆகியவையே இந்த மிகச்சிறப்பான சாதனைக்கான காரணம் என்று மாணவர்கள் குறிப்பிட்டனர்.
B.E./B.Tech. மாணவர்களுக்கான JEE (மெயின்) தேர்வு, இந்நாடங்கிலும் மற்றும் வெளிநாடுகளிலும் 233 நகரங்களில் ஒரு நாளுக்கு இரண்டு ஷிப்ட்கள் என்ற முறையில் 2020 ஜனவரி 7 மற்றும் 9ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் நடத்தப்பட்டது. மொத்தத்தில், B.E./B.Tech. கல்விக்கான இத்தேர்வுக்கு மொத்தத்தில் 9,21,261 மாணவர்கள் பதிவுசெய்திருந்தனர்.
சிறப்பான கல்விசார் வெற்றியை பெறுவதற்கான அவர்களது பெரு விருப்பத்தை பூர்த்திசெய்ய மாணவர்களுக்கு உதவுவதே ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் குறிக்கோளாகும். பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்க உருவாக்கம், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்காக மையப்படுத்தப்பட்ட ஒரு உள்ளமை செயல்முறையை ஆகாஷ் கொண்டிருக்கிறது. இதன் தேசிய கல்விசார் குழுவால் இது வழிநடத்தப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் மாணவர்கள், நடத்தப்படுகிற பல்வேறு மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளிலும் மற்றும் NTSE, KVPY மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டி தேர்வுகளிலும் சிறப்பான தேர்ச்சி பெற்று தேர்வு செய்யப்படுவதை தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கின்றனர்.
ஆகாஷ் எஜூகேஷன் சர்வீசஸ் லிமிடெட் (AESL) குறித்து
ஆகாஷ் எஜூகேஷன் சர்வீசஸ் லிமிடெட் (AESL), மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகள், பள்ளி / போர்டு தேர்வுகள் NTSE, KVPY மற்றும் ஒலிம்பியாட்ஸ் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு மாணவர்களுக்காக விரிவான, தேர்வுக்கு தயார் செய்யும் சேவைகளை வழங்கிவருகிறது. தரமான பயிற்சியோடு “ஆகாஷ்” பிராண்ட் இணைத்து பார்க்கப்படுகிறது என்று AESL நம்புகிறது மற்றும் பல்வேறு மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து மாணவர்கள் தேர்வுசெய்யப்படும் கடந்தகால நிரூபிக்கப்பட்ட சாதனை வரலாற்றை இது கொண்டிருக்கிறது.
தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்யும் தொழில்துறையில் 32 ஆண்டுகளுக்கும் கூடுதலான செயல்பாட்டு அனுபவத்தைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம். மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் அதிகமான எண்ணிக்கையில் இதன் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதை தொடர்ந்து உறுதிசெய்து வருகிறது. 200+ ஆகாஷ் மையங்கள் கொண்ட (பிரான்சைஸீ உட்பட), அகில இந்திய வலையமைப்பை கொண்டிருக்கும் இதில் 250,000க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *