கவின்கேர் – ன் “புத்தாக்க ஹேர் கலர் பிராண்டான இன்டிகா” அதன் பிராண்டு தூதர்களாக நடிகர்கள் அக்ஷய்குமார் மற்றும் இலியான டிக்ரூஸ் – ஐ நியமனம் செய்திருக்கிறது
சென்னை, 28 ஜனவரி 2020: 2008 ஆம் ஆண்டில் 10 நிமிடத்தில் ஹேர் கலரிங் என்ற சிறப்பான, புதுமையான செயல்முறையை அறிமுகம் செய்ததன் வழியாக இந்திய ஏர்கலர் துறையை புரட்சிகரமாக மாற்றிய தனது பிரபல பிராண்டான இண்டிகாவின் புதிய பிராண்டு தூதர்களாக இந்தியாவின் பிரபல நடிகர்களான அக்ஷய்குமார் மற்றும் இலியானா டி’க்ரூஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதை இந்தியாவில் எஃப்எம்சிஜி துறையில் பெருநிறுவனமாக திகழும் கவின்கேர் அறிவித்திருக்கிறது.
10 நிமிடங்களில் ஹேர் கலரிங் என்ற புதுமையான செயல்முறை அறிமுகத்தின் மூலம் தென்னிந்தியாவில் சந்தையில் முதலிடம் பிடித்திருக்கும் இன்டிகா, ஹேர் கலர் துறையில் இந்தியாவின் மிக வலுவான நிறுவனமாக திகழ தயார்நிலையில் அனைத்து தகுதிகளுடனும் இருக்கிறது. அம்மோனியா இல்லாத ஹேர் கலரான இன்டிகா ஈசி, தானாகவே செய்து கொள்ளக்கூடிய தயாரிப்பான 10 நிமிட ஷாம்பூ ஹேர்கலர், இன்டிகா க்ரீம் – 10 நிமிட க்ரீம் ஹேர் கலர் மற்றும் இன்டிகா 10 நிமிடங்கள் பவுடராக கிடைக்கக்கூடிய ஒரே ஹேர்கலர் ஆகியவற்றை இத்தயாரிப்பு அணிவரிசை கொண்டிருக்கிறது. நுகர்வோர்களுக்கு அதிவேக மற்றும் அதிஎளிதான ஹேர்கலரிங் தீர்வாக இன்டிகாவை இது நிலைநிறுத்தியிருக்கிறது. நாடெங்கிலும் இன்டிகா ஹேர்கலர் பல்வேறு வண்ணங்களிலும் (ஷேடு) கிடைக்கிறது.
இந்நிறுவனத்தின் பர்சனல் கேர் மற்றும் அலையன்சஸ் பிரிவின் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரான திரு. வெங்கடேஷ் விஜயராகவன், புதிய தூதர்கள் நியமனம் குறித்து கருத்து தெரிவிக்கையில். “கடந்த பல ஆண்டுகளாக இன்டிகா அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது மற்றும் அதன் வளர்ச்சியை இன்னும் துரிதமாக்குகின்ற நிலையில் இப்போது இருக்கிறது. இன்டிகா பிராண்டை பிரதிநிதித்துவம் செய்ய நடிப்புத்திறன் மிக்க மற்றும் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர்களான அக்ஷய்குமார் மற்றும் இலியானா டி’க்ரூஸ் – ஐ அதன் தூதர்களாக கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்டிகா பிராண்டின் கற்பனைத் தோற்றத்திற்கு உகந்த பிரதிநிதித்துவ நபர்களாக இருப்பதன் மூலம் இந்த பிராண்டையும் மற்றும் இதன் மைய மதிப்பீடுகளையும் மிக நேர்த்தியாக பிரபலப்படுத்துகின்றனர். ஸ்டைல், இளமையின் சக்தி மற்றும் புத்தாக்க நடிப்புத்திறன் ஆகியவற்றின் மிகச்சரியான கலவையைக் கொண்டிருப்பதன் மூலம் இன்டிகா ஹேர் கலரின் முகமாக, நல்லெண்ணத் தூதர்களாக இருப்பதற்கான சரியான தேர்வாக நடிகர் அக்ஷய்குமார் மற்றும் இலியானா டி’க்ரூஸ் இருக்கின்றனர்,” என்று கூறினார்.
இன்டிகா பிராண்டு உடனான தனது உறவு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் அக்ஷய் குமார், “கவின்கேர் குழுமத்தின் ஒரு அங்கமான இன்டிகா ஹேர் கலருக்கான பிராண்டு தூதராக இணைந்து செயல்படுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். புத்தாக்கம் என்ற கருத்தாக்கத்தையே மறுவரையறை செய்த பெருமை இந்த பிராண்டுக்கு உரியது. 10 நிமிடங்களில் ஹேர் கலரிங் செய்வதை சாத்தியமாக்கியிருக்கின்ற இன்டிகா குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பது அற்புதமான உணர்வை எனக்குத் தருகிறது. இந்த பிராண்டுடன் நானும், நடிகை இலியானாவும் இணைந்திருக்கின்ற இந்நிலையில், இத்தயாரிப்பின் சிறப்பான அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து நாடெங்கிலும் மக்கள் அறியுமாறு செய்வதன் மூலம் இந்த பிராண்டை இன்னும் பிரபலமாக்க நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம்,” என்று கூறினார்.
இந்த பிராண்டின் தூதராக தனது பிணைப்பு குறித்து பேசிய நடிகை இலியானா டி’க்ரூஸ், “கவின்கேர் குழுமத்துடனும் மற்றும் இன்டிகா ஹேர் கலர் பிராண்டுடனும் இணைந்து செயல்படுவது எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது. ஹேர் கலர்களில் எண்ணற்ற பல வகைகளை இன்டிகாவின் அணிவரிசை கொண்டிருக்கிறது. ஒரு கிண்ணம் அல்லது பிரஷ்க்கான அவசியம் இல்லாமல், வெறும் 10 நிமிடங்களில் நாமே ஹேர் கலரிங் செய்ய முடியுமென்பது இன்டிகா தயாரிப்புகளின் நிகரற்ற சிறப்பம்சமாகும். இந்த ஒத்துழைப்பு உறவின் மூலம், இளமையாக உணரவைக்கும் இன்டிகாவின் நல்ல செய்தியை பரப்புவதன் வழியாக இந்தியாவெங்கிலும் அனைத்து வாடிக்கையாளர்களையும் சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வாழ்க்கையில் நம்பிக்கையோடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல அவர்களுக்கு சரியான நம்பிக்கையினை இன்டிகா வழங்குகிறது என்ற செய்தியினை நாங்கள் எடுத்துரைப்போம்,” என்று கூறினார்.
இன்டிகா குறித்து: 1995 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இன்டிகா ஹெர்பல் ஹேர் கலர், உங்களது தலைமுடியை பாதுகாப்பாகவும், திறம்படவும் கலரிங் (வண்ணசாயமேற்றும்) செய்கின்ற 5 மூலிகை உட்பொருட்களை உள்ளடக்கியிருக்கிறது. 2009 ஆம் ஆண்டில் நுகர்வோர்களின் உள்நோக்கு அடிப்படையிலும், 10 நிமிடங்களில் ஹேர் கலரிங் என்ற புத்தாக்கத்தோடும் பிராண்டு இன்டிகா மறுஅறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறாகத்தான் இன்டிகா 10 நிமிடங்கள் ஹெர்பல் ஹேர் கலர்ஸ் என்ற புத்தாக்க தயாரிப்பு அணிவரிசை தோன்றியது.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக் கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள ஒரு FMCG பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும். இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது (R&D), இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. இன்றைக்கு 1600 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்றுமுதலைக் கொண்டிருக்கும் கவின்கேர், குறிப்பிடத்தக்க பல மைல்கற்களை எட்டி சாதனைகள் படைத்திருக்கிறது. தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றுவதற்காக மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் இந்நிறுவனம், மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கிறது. ‘வாடிக்கையாளர்களுக்கு மிக அதிக அளவிலான திருப்தியை வழங்குகின்ற தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் நாங்கள் வளர்ச்சியை எட்டுவோம் மற்றும் இதன்மூலம் ஒரு ரோல் மாடலாக திகழ்வோம்’ என்ற இதன் கார்ப்பரேட் செயல்திட்டத்தை வலுவாக சார்ந்தே கவின்கேரின் வெற்றி அமைந்திருக்கிறது.