திரு.கமல்ஹாசன் முதலமைச்சர் ஆனால் போடப்படும் முதல் மூன்று முக்கிய கையெழுத்துகள்.
*முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா, அப்படி என்றால் ஊழலை சட்டப்பூர்வமாக ஒழிப்பதற்கான ஒரு மாநில அரசு உருவாக்க வேண்டிய சுயேட்சையான நீதி அமைப்பின் பெயர் லோக் ஆயுக்தா, இது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை என்பது கூடுதல் தகவல்.
*இரண்டாவது கையெழுத்து மனித மலத்தை மனிதனே அள்ளும் திட்டத்திற்கு முடிவு கட்டுவது. சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கும் Man Hole’s தமிழ்நாட்டில் ஒருபோதும் இருக்காது. இயந்திரங்களை கொண்டு மட்டுமே சுத்தம் செய்யப்படும். இது நாள் வரை சுத்தம் செய்த பணியாளர்களை அரசு அலுவலகங்களிலும், அரசு பள்ளிகளிலும் துப்புரவு பணியாளர்களாக நியமனம் செய்வது.
*மூன்றாவது கையெழுத்து, ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு சாதி இல்லை என்று, சாதி இல்லாமல் பள்ளிக்கூடத்தில் பெயர் சேர்த்தால் அந்த குழந்தைக்கு வேலைவாய்ப்பில் அரசு ஒதுக்கீடு உண்டு என்பது.
மய்யத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே சரி எது தவறு எது என்று தெரியும். இங்கு மய்யம் என்பது நடுவில் இருந்து சரியானவற்றை தேர்வு செய்வது.
தனி மரம் தோப்பு ஆகாது ஆம் தனி மனிதர்கள் சேர்ந்ததே சமுதாயம், சரியான அடித்தளங்களை அமைக்க தனியாய் போராடுகிறோம், உங்கள் கரங்களையும் கொடுங்கள்.
நாளை நமதே..! நிச்சயம் நமதே..!!