மாயநதி # திரைபட விமர்சனம்

இது ஒரு காதல் கதை +2 (பன்னிரெண்டாம் வகுப்பு ) மாணவியின் காதல் கதை பற்றி பார்ப்போம்

சிறு வயதிலேயே தாயை இழந்த வெண்பாவிற்காக(கதாநாயகி) ஆடுகளம் நரேன் வேறொரு கல்யாணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய ஒரே மகளுக்காக வாழ்த்து வருகிறார். பள்ளியில் மதிப்பென் ( marks)முதல் மாணவியாக +2படித்து வரும் தன்னுடைய மகளை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும் என்பது தான் இவருடைய கனவு லட்சியம் மகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் அதே பகுதியில் அபிசரவணன்  ஆட்டோ ஓட்டுகிறார். நண்பர்களுடன்  ஜாலியாக இருக்கிறார். வெண்பாவிற்க்கு அபி சரவணன் மீது திடீர் காதல் வருகிறது வெண்பா காதலித்தவனை கரம் பிடித்தளா?ஒன்று சேர்ந்தார்களா? அப்பாவின் ஆசை லட்சியம் டாக்டர் ஆனாலா?

கதாநாயகன் அபி சரவணன் எதார்த்தமாக நடித்துள்ளார் நாயகி வெண்பா அனுபவம் மிக்க நடிப்பு கவர்ச்சி இடம் கொடுக்காமல் கச்சிதமாக நடித்துள்ளார் .தந்தை கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் மகளின் தந்தையாக வாழ்ந்து இருக்கிறர்  அபிசரவணனின் நண்பர்களாக வரும் அப்புக்குட்டி, கார்த்திக் ராஜா இரு கதாபாத்திரமும் படத்தில் நம்மை உற்சாக படுத்திருக்கிறார்கள் பவதாரணியின் இசை படத்தில் பலம் சேர்க்கிறது, கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை. ஸ்ரீநிவாஸின் ஒளிப்பதி ,கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங்கும் அற்புதம் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் பணிகள் சிறப்பு .  படிக்கிற வயதில் காதல் வந்ததால் அந்த பெண் சந்திக்கும் பிரச்சனை  இன்றைய காலத்தில் தேவையான கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கியிருக்கிறார் அஷோக் தியாகராஜன். வாழ்த்துக்கள் பாராட்டு 

மாயநதி  படம் நம் எல்லோருடைய மனதில் சங்கமம்  குடும்பத்துடன் பார்க்ககும் படம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *