எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வென்ற மலேசிய தமிழ்த்தம்பதியர்!

தர்மம் தலைகாக்கும் மாத இதழ் சார்பாக பாரத ரத்னா எம்.ஜி ஆர் நூற்றாண்டு விழா மற்றும் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை காமராஜ் அரங்கில் நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக தீபம் மருத்துவ மனையோடு இணைந்து ரத்த தான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம். நடைபெற்றது..

அதை முகவை தொழிலதிபர் மனித நேய செம்மல் டாக்டர் திரு.கணேஷ்குமார் அவர்கள் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு மனித நேய சிகரம் பாலம் கல்யாணசுந்தரம் தலைமையில் சென்னை மா நகராட்சியின் முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, மூத்த திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி முத்துராமன், பழம்பெரும் நடிகை திருமதி.எம்.ஜி.ஆர் லதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ் நாள் சாதனை யாளர் விருதினை வழங்கினார்கள்.

கடின உழைப்பால் உயர்ந்த மலேசிய வாழ் தமிழ் பெண்மணி திருமதி. லட்சுமி ரவிக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

விருதினை திருமதி லட்சுமிரவி, திரு.ரவி.ஆகியோர் இணைந்து விருதினை பெற்றுக்கொண்டார்கள்.

வாழ் நாள் சாதனையாளர் விருது பெற்ற திருமதி. லட்சுமி ரவி மலேசியாவில் ஷாலாம் என்ற இடத்தில் ஸ்ரீ மயூரி என்ற பெயரில் சிறிய உணவகத்தை ஆரம்பித்து தன் கடின உழைப்பாலும்,நேர்மையாலும் இன்று மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஏழைகளுக்கு கல்வி,ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு உதவுதல்,தமிழக இளைஞர்கள் க்கு வேலை வாய்ப்பு அளித்தல்…போன்ற சமூக ஆர்வலராகவும் உயர்ந்து விளங்கியதால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.இதுவரை இந்த விருது தமிழகத்தை சார்ந்தவர் களுக்கு மட்டுமே வழங்க பட்டு வந்தது என்பது.இப்போது வெளிநாட்டு வாழ் தமிழ் பெண்மணிக்கு வழங்குகிறது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திருமதி. லட்சுமி ரவி கூறுகையில் தன் கணவர் ரவி..மற்றும் தன் குழந்தைகள் மூன்றுபேரும் தன்னைப் போலவே சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்து இந்த வாழ் நாள் சாதனையாளர் விருது தனக்கு மேலும் பல சமூக சேவையில் ஈடுபட தனக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மின்னல் பிரியன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *