இயக்குனர்களின் பாராட்டு மழையில் அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ
உலக சுற்றுச்சூழல் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்திய தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனித குலத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும் என்று கூறி “கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பிரபல இயக்குனரான தங்கர் பச்சான், பூமி எதிர்கொள்ளும் உடனடியான சிக்கலை இந்தக்காணொலி நமக்கு தெளிவுபடுத்துகிறது. கட்டாயம் ஒரு முறை இதைக்காணுங்கள். நீங்கள் உயிர் வாழ்வதற்காகவாவது! என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பார்த்திபன் – கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் விழிப்புணர்வு காணொலி பாருங்கள் என்று கூறினார்.
இயக்குனர் பொன்ராம் – கவனிக்க வேண்டிய பதிவு. காலநிலை மாற்றத்தை பற்றி அற்புதமாக கூறுகிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இயக்குனர் சமுத்திரகனி – இயற்கையை பாதுகாப்போம்… நம்மை பாதுகாத்துக் கொள்வோம்… விழித்தெழு…! என்று கூறியுள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி – பூமியின் அதிக வெப்பத்தால் புயல், வெள்ளம், கிருமிகளின் வருகையென விஞ்ஞானப் பூர்வமாக டாக்டர் அன்புமணி அவர்களின் ‘ ‘கொரோனாவும் கால நிலை மாற்றமும்’ எனும் விழிப்புணர்வு காணொளி பேசுகிறது முதலில் இதற்கு நன்றிகள்
பாராட்டுக்கள்…
இவ்வாறு முன்னணி இயக்குனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.