கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்றுயிரால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது கற்பக விருட்சம் அறக்கட்டளை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க ஆரம்பித்தது.

கடந்த 120 நாட்களாக தொடர் நிவாரணப் பணிகளில் இதுவரை 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

விவசாயிகள், பழங்குடி, இருளர், மாற்று திறனாளிகள் என தொடங்கிய பணிமேலும் விரிவடைந்தது.

பழனியில் சுவர் ஓவிய கலைஞர்கள், நீலகிரியில் பழங்குடி மக்கள், சத்தியமங்கலம் மலைகிராம ஆதிவாசிகள், சிவகாசியில்  தீப்பெட்டி/பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், திருச்சியில் நெசவாளர்கள், விதவைகள் நாமக்கல் மாவட்டத்தில் கோவில் பூசாரிகள், கடலூரில் குயவர்கள், சென்னையில் புகைப்பட கலைஞர்கள், மேடை பாடகர்கள், சவர/சலவைத் தொழிலாளிகள், தூத்துகுடியில் நையாண்டி,பறை இசை கலைஞர்கள்,  சினிமா துணை நடிகர்/நடிகையர், என பலதரப்பட்ட மக்கள் கடந்த 4 மாதங்களில் பயன் அடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 தையல் கலைஞர்களுக்கு ₹23,0000 மதிப்பில் அரிசி/மளிகை பொருட்கள் 29 ஜுலை அன்று வழங்கப்பட்டது.

டோக்கியோ தமிழ் சங்கம் இவர்களின் சேவையை பாராட்டி பிரபல பாடகர்களை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தியும், நிதி வழங்கியும் உற்சாகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *