‘தண்ணி வண்டி’ படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி .

தண்ணி வண்டி’ படப்பாடல் இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டு!
 
‘தண்ணி வண்டி’ படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி .
 
‘தண்ணி வண்டி’ படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாணிக்க வித்யா மற்றும் இசையமைப்பாளர் மோசஸ்  இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இது எனக்குப் பத்தாவது படம். எனக்கு முதல் பாடல் வாய்ப்பு கொடுத்து அறிமுகப் படுத்தியவர் ‘உச்சிதனை முகர்ந்தால்’  இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்  அவர்கள்.
 
‘என் பாட்டுச் சத்தம் கேட்டு தீப்பிடிக்குது காத்து’ என்ற வரியை பார்த்துப் பாராட்டி அந்த வாய்ப்பு வழங்கினார்.
 
பின்பு  இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் :சித்து +2 ‘என்ற படத்திற்கு எழுதினேன்.ஆனால் அது இடம் பெறாமல் போனது.
 
கவிஞர் அறிவுமதி அய்யா அவர்கள் நான் பாடல் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நிறைய மெட்டுகள் கொடுத்து பயிற்சி செய்ய ஊக்கப் படுத்தினார்.
 
பின்பு ‘சபாஷ் சரியான போட்டி’  ,’திரு.வி. க. பூங்கா’ போன்ற படங்களுக்கு எழுதினேன்.கால வேகத்தில் திருமணம், சென்னையை விட்டு பிரிவு என்று காலங்கள் உருண்டு ஓடினாலும்  பாடலுக்காக மீண்டும் சென்னை வந்தேன். 
 
நான் வாய்ப்பு தேடிய காலத்தில் மிஷ்கின் அவர்கள் கூறிய வார்த்தைகளை இன்றும் பின்பற்றுகிறேன்.
நீ பாடல் துறையில் வளர வேண்டுமானால் கல்லூரி படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து உன்னுடைய லட்சியத்தை அடைய முயற்சி செய் என்று அறிவுரை வழங்கினார்.
என் வரிகளைப் பாராட்டி அவரே ஒரு விலையுயர்ந்த வாக்மேனும் பரிசளித்தார்.
அவர் கூறிய படி நான் இன்று SDNB வைஷ்ணவா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளேன்.
 
என்னை மிஷ்கின் சார் மறந்திருக்கலாம்.
 
கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் எப்போதும் என் கவிதைகளையும் பாடல்களையும் உற்சாகமும் ஊக்கமும் தந்து இன்னும் என் பாடல் பயணத்தின் கூடவே வரும் ஓர் ஆசானாக திகழ்கிறார்.
 
மீண்டும் பாலாஜி தரணிதரன் அவர்களின் ‘ஒரு பக்க கதை’ தான் என்னைச் சென்னையில் குடியேற வைத்தது.அதில் ஒரு அழகான பாடல் 
அமைந்தது.அது எனக்கு பெரிய அடையாளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்தது.
 
:என்னோடு விளையாடு’  வில் நான் எழுதிய காலை தேநீர் பாடல் தான் எனக்கு பெரிய வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்றுத் தந்தது.
 
அடுத்து வெங்கட சுப்ரமணியம் ‘மைக் டெஸ்டிங்’ என்ற படத்திற்கு பாடல் எழுதினேன்.அது இன்னும் வெளிவரவில்லை.
 
கன்னட மொழிபெயர்ப்பு படத்திற்கும் எழுதியுள்ளேன்.அதுவும்  வெளி வரவேண்டியுள்ளது.
 
‘தண்ணி வண்டி’ பாடல் வாய்ப்பு மோசஸ் அவர்கள் மூலமாக கிடைத்தது.
ஒரு இரவில் 11 மணிக்கு  டியூன் அனுப்பி எழுதப்பட்டது.
 
எனது பாடல் பயணத்தில் ஒரு நண்பனாகவும் விலகாத பயணத்தின் வழிப் போக்கனா கவும் மோசஸ் அவர்கள் இருப்பதாக உணர்கிறேன்.
இசையை உணர்ந்து அவர் நினைக்கும் வரிகள் வரும் வரை சமரசம் செய்யாத தன்மையும் இந்த வெற்றிக்கு காரணமாக உணர்கிறேன்.
 
அவரால்தான் இயக்குநர் மாணிக்க வித்யா அறிமுகம் கிடைத்தது.வரிகளின் ரசனைக் காரராக வேலை வாங்குவதில் கண்டிப்பானவராகவும் இருந்ததும் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம்.
 
தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் நேரில் வாழ்த்திய நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாதது.
 
பாடலை முழுமையாகக் கேட்டு மனதார இயக்குநர்  கே.பாக்யராஜ் சார் பாராட்டினார். அது ஆஸ்கார் விருது போல் பெருமைப்பட வைத்தது.பாக்யராஜ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
 
இயக்குநர் விஜய் மகேந்திரன் அவர்கள் பாடல் வரிகளையும் இசையையும் பாராட்டி வாழ்த்தியதை எனக்கு கிடைத்த பூங்கொத்தாகக் கருதுகிறேன்.
 
அண்ணாதுரை இயக்குநர் சீனிவாசன் 
ஸ்டான்லி , அனிஸ், அனந்த் ராஜ் என நிறைய இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
 
அறிவுமதி அய்யாவின் பாடல் பற்றிய பாராட்டுதலும்
 அப்பாவுக்கு எதுக்கு நன்றி என்ற வாஞ்சயும் கண்களில் கண்ணீர் வரவழைத்தனர்.
 
எண்ணம்தான் வாழ்க்கை என்பது  நான் எங்கு சென்றாலும் என் பாடல் என்னை விட்டு விலகாது என்பதை இத்தருணம் உணர்த்துகிறது.
எப்போதும் என்னோடு இருக்கும் தோழி செந்தமிழ் கோதைக்கு நன்றி.
 
இன்னும் என்னை இயங்க வைக்கும் என் கல்லூரி SDNB வைணவ கல்லூரிக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *