தஞ்சை பெரிய கோயில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக வரவில்லை என்றாலும், அது எழுப்பப்பட்ட விதம் இன்றுவரை பிரமிப்பை
எழுப்பக்கூடியதாக இருக்கின்றது.
கோயில் மொத்தமும் கருங்கல்லால் உருவானது. அதன் நெடிதுயர்ந்த கோபுரத்தில் உருவான விமானம், அதன் மேலுள்ள கலசம், கலசத்தை தாங்கி நிற்கும் 36 அடி உயர ஒற்றைக்கல் என்று அனைத்தையும் 1962 லேயே நேரில் கண்டறிந்த நடிகர்
திரு சிவகுமார், அதை ஓவியமாகவும்
வரைந்திருக்கிறார்.
அது பற்றி அவர் 16 – 2 – 2020 ‘தினமணி’யில் எழுதியிருப்பது…….
“கலசத்தை தாங்கியிருக்கும் கல் 36 அடி
சுற்றளவு கொண்டது. அதனால் காலை
9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை கலசத்தின் நிழல் அந்தக் கல் மீதே விழுந்து விடும். அதற்கு முன்னும்
பின்பும் நிழல் காம்பவுண்டுக்கு வெளியே போய்விடும்.
1962 ம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி எனது 19 வது வயதில் வரைந்த ஒவியம்
அப்போது ஓவியக்கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். நான் தஞ்சை சென்ற போது நாள் முழவதும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஆகவே கலச நீழல் எங்காவது தரையில் விழுகிறதா என்று பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
மங்களாம்பிகா ஒட்டலில் நாள் ஒன்றுக்கு 4 ரூபாய் வாடகையில் அறை
எடுத்து குளித்து தயாராகி, காலை 6.30
மணிக்கு துவங்கி பிற்பகல் 2.30 மணி வரை ஒரே மூச்சாக வரைந்து முடித்த ஒவியம்.”
Ithayakkani S Vijayan