கிராமப்புற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.*

கிராமப்புற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.*

நகர்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகள் Online வகுப்புகள் நடத்துவதால் ஆசிரியப் பெருமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கிராமப்புற தனியார் பள்ளிகள் Online வகுப்புகள் நடத்தாததால் ஆசிரியப் பெருமக்கள் கடந்த ஆறு மாதங்களாக வேலை வாய்ப்பு இல்லாமல் பொருளாதார சிக்கலில் இருக்கிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா அதனை சுற்றியுள்ள உத்திரங்குடி, ராதாநஞ்செய், கொடியாளதூர், வலிவலம், திருக்குவளை, கருங்கண்ணி, கில்லுகுடி கிராமப்புறங்களில் வசிக்கும் 18 தனியார் பள்ளி ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு *கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பாக கொரோனா காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்றி தவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு *அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக ₹10,000 மதிப்பில் வழங்கப்பட்டது*.
இதற்கு நிதி உதவி செய்த நண்பர் *திரு.சங்கர் ராமநாதன் ( ER Hr Sec School, Trichy முன்னாள் மாணவர்)* அவர்களுக்கும், நிவாரணப் பொருட்களை முறையாக வழங்கிய *திரு.வைத்தியநாதன்* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *