அன்புள்ளம் கொண்ட நடிகை சிந்துவுக்கு ஆதரவு தரும் நல்உள்ளங்கள்!
எளிய மக்களின் பிரச்சினைகளை பேசிய “அங்காடி தெரு” திரைப்படம் மற்றும் பல பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்தவர் நடிகை சிந்து. ஆரம்ப காலத்தில் இருந்து தன்னைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான எளிய மனிதர்களுக்கு, வறுமையில் வாடும் சக நடிகர் நடிகைகளுக்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட சிந்து, கொரோனா தொடக்க காலத்தில்
பல ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, முக கவசம் போன்ற அடிப்படை பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவினார்.
இந்நிலையில் முன்பை போல் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு கஷ்ட நிலைக்குச் சென்ற சிந்து, தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதையும், அதை குணப்படுத்த முடியும் என்ற போதிலும் சிகிச்சைக்கான போதிய பண வசதி இல்லை என்பதையும் கூறி பொதுமக்களிடமும் சக நடிகர் நடிகைகளிடமும் உதவி கோரியிருந்தார். அனைத்து இந்திய இந்து மக்கள் பேரவை தலைவர் பாபா ராம்தாஸ் ஜி தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தன்னை சந்தித்து நலம் விசாரித்து சிகிச்சைக்கு 25000 ரூபாய் நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி கூறிவிட்டு, அடுத்தவருக்கு கஷ்டம் என்றால் தன்னுடைய நலனை பொருட்படுத்தாமல் ஓடி ஓடி உதவி செய்யும் கலைஞர்களை கண்ணீர் சிந்த விடாமல் சக சின்னத்திரை நடிகர்-நடிகைகளும் முன்னணி வெள்ளித்திரை நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நற்குணம் கொண்ட மனிதரை காப்பாற்ற முன்வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.