பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்ற புதிய
மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும்
”குரங்கு பொம்மை” பட கதாநாயகி
சன் டிவியில் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள மெகாத்தொடர்
“ அன்பே வா “
குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, “ அன்பே வா “ கதை அமைக்கப்பட்டுள்ளது.
வருண்– பூமிகா இருவரும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு எதிரெதிர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
நாயகி பூமிகா , மிகவும் பொறுப்பான, தன்னம்பிக்கையுள்ளவள். கிராமத்து சூழலில் வளர்ந்த பாரம்பரியம் மிக்க பெண்.
நாயகன் வருண் , பணக்கார சூழலில் வளர்ந்த ஆடம்பரமான இளைஞன்.
விதியின் சந்தர்ப்பவசத்தால் இருவரும் ஒரே சூழலில் வாழ நேரிடுகிறது.
இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பையும் காதலையும் கண்டுபிடித்து, திருமணத்தில் இணைவார்களா என்பது அன்பே வா கதைச்சுருக்கம்.
விராட் நாயகனாகவும், குரங்கு பொம்மை பட நாயகி டெல்னாடேவிஸ் பெரியத்திரையிலிருந்து, சின்னத்திரைக்கு அன்பே வா எனும் புதிய மெகாத்தொடர் மூலம், கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் வினயா ப்ரசாத்,ஆனந்த், கன்யா,ரேஷ்மா,கெளசல்யா செந்தாமரை,பிர்லாபோஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர்.
சரிகமா இந்தியா லிட் சார்பாக,
Voice President B.R விஜயலட்சுமி தயாரிக்கிறார்.
கதை – சரிகமா கதைக்குழு
திரைக்கதை – ராஜஸ்ரீ N.Roy
வசனம் – ரதிபாலா
இசை – தரண் குமார்
க்ரியேட்டிவ் – K. சண்முகம்
இயக்கம் – R. ப்ரின்ஸ் இமானுவேல்