மலர்க்கண்ணன் பதிப்பகத்தின்
முப்பெரும் விழா
சென்னை மேற்கு முகப்பேரில் அமைந்துள்ள அமுதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 07.02.2021 அன்று மாலை 4 மணியளவில் கவிஞர் க.மணிஎழிலனின் மலர்க்கண்ணன் பதிப்பகம் நடத்திய முப்பெரும் விழா அழகுற நடைப்பெற்றது.
கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப் போராளிகளாக பணியாற்றிய பல்வேறு துறையினருக்கு “சேவைச் செம்மல்” விருது வழங்கும் விழா, மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் 10 நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் “கூட்டாஞ்சோறு” பத்திரிகை அறிமுக விழா என மூன்று விழாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அருமையாக நடைப்பெற்றன.
இவ்விழாவில் உயர்திரு நக்கீரன் கோபால், ‘கலைமாமணி’ ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் எழுத்தாளர் டாக்டர். பி.அமுதா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ‘நமது நகரம்’ ஆசிரியர் S.சரவணன், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நக்கீரன் கோபால், ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர், R3 அசோக்நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் M.K.தினகரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ‘பீப்பிள் டுடே’ ஆசிரியர் G.சத்திய நாராயணன், சுகாதார ஆய்வாளர் V.சவரிராஜ், பெரம்பலூர் லக்ஷணா கிச்சன்ஸ் (கொத்துகறி) இயக்குநர் S.V.ரிஷி, கிருஷ்ணகிரி சாய் உதவுக்கரங்கள் நிர்வாகி ஆனந்தி ஆகியோருக்கு சேவைச் செம்மல் விருது வழங்கினார்கள்.
விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்திய குழந்தைகளுக்கும், நூலில் தங்கள் படைப்புகளை பதிவு செய்த கவிஞர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களின் திருக்கரங்களால் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதிய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் பதிப்பாசிரியர் க.மணிஎழிலனின் தமிழ்ப்பணி அறிஞர் பெருமக்கள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.