சதர்ன் ஹெல்ல் ஃபுட்ஸ் – ன் மன்னா கோ கிரைன்ஸ் மால்ட் ஆரோக்கிய பானம் அறிமுகம்!

சதர்ன் ஹெல்ல் ஃபுட்ஸ் – ன் மன்னா கோ கிரைன்ஸ் மால்ட்

ஆரோக்கிய பானம் அறிமுகம்!

6000+ கோடி ரூபாய் மதிப்புள்ள மால்ட் உணவு பானங்கள் (MFD) சந்தையில் இதன்மூலம் கால்பதிக்கிறது

சென்னை, 18 மார்ச் 2021: ‘மன்னா” என்ற பிரபல பிராண்டு பெயரில் தனது தயாரிப்புகளை சந்தையாக்கல் செய்து வரும் சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய பல தானிய ஆரோக்கிய பான மிக்ஸ் – ஐ மன்னா கோ கிரைன் மால்ட் (MANNA GO GRAIN Malt) என்ற பெயரில் அறிமுகம் செய்திருப்பதன் மூலம் ரூ.6000 கோடி மதிப்புள்ள இன்ஸ்டன்ட் மால்ட்டட் உணவு பானம் வகையின சந்தைக்குள் நுழைந்திருக்கிறது.  

குழந்தைகளின் வளர்ச்சி, நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே மன்னா கோ கிரைன்ஸ் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  7 தானியங்களை கொண்டிருப்பது மட்டுமன்றி, நமது உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களையும் கொண்டதாக இது செறிவூட்டப்பட்டிருக்கிறது.  ஜிங்க், செலேனியம், வைட்டமின் A, C, E போன்ற நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கும் பொருட்களை உள்ளடக்கியிருக்கும் இந்த ஊட்டச்சத்து பான மிக்ஸ், இந்த நுண்ஊட்டச்சத்துக்களின் 33% RDA – ஐ ஒற்றை பரிமாறலில் வழங்குகிறது.   

சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் – ன் தலைமைச் செயல் அதிகாரி திரு. முருகன் நாராயணசாமி கூறுகையில், இப்புதிய தயாரிப்பு அறிமுகம் குறித்து பேசுகையில், “இவ்வகையினத்தில் குழந்தைகளுக்கான ஆரோக்கிய பானங்களுள் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படும் மன்னா கோ கிரைன்ஸ், கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை, பார்லி, கொண்டைக்கடலை மற்றும் மக்காச்சோளம் ஆகிய பல்வேறு தானியங்களை கொண்டிருக்கிறது.  இந்த சிறப்பான, தனித்துவமான கலவையின் மூலம் பல தானியங்களை செறிவாக கொண்ட ஒரு இன்ஸ்டன்ட் பான மிக்ஸ் என்ற பெருமையினை இந்நாட்டில் இது பெறுகிறது.  ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்கள் மீது மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் விழிப்புணர்வு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ரீடெய்ல் மற்றும் மின்-வர்த்தக துறையின் வளர்ச்சி, மால்ட் – ஐ அடிப்படையாக கொண்ட உணவுபான வகையினத்தின் வளர்ச்சியை ஏதுவாக்கியிருக்கிறது.  நுகர்வோர்களின் குறிப்பாக சிறார்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் இத்தயாரிப்பு அவர்களுக்கு அதிக பயனுள்ளதாக மற்றும் நோயெதிர்ப்புத் திறனையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார். 

உடல்வளர்ச்சி, மூளை சார்ந்த மனவளர்ச்சி, வலிமை, வலுவான எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு திறன் ஆகிய 5 ஆதாயப்பலன்களை வழங்குவதற்கு அவசியமான 24 நுண்ஊட்டச்சத்துக்களின் 33% RDA (பரிந்துரைக்கப்படுகின்ற உணவுமுறை அளவு) – ஐ மன்னா கோ கிரைன்ஸ் – ன் ஒருமுறை பரிமாறல் அளவு வழங்குகிறது.  நோய் எதிர்ப்புத்திறன் அளவை உடலில் அதிகரித்து, நோய் வராமல் பாதுகாக்கின்ற 7 ஊட்டச்சத்துக்களையும் இது கொண்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். 

“அவசியமாக இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை மக்கள் பெறுவதற்கு உதவுகின்ற தயாரிப்புகளை வழங்குவது மீது எமது நிறுவனம் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது.  நினைத்தவுடன் உடனடியாக அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய சரியான பானத்தை தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழங்குவதற்கு உடனடி பரிமாறக்கூடிய இந்த இன்ஸ்டன்ட் பானம் உதவும்,” என்று திரு. முருகன் மேலும் விளக்கமளித்தார். 

முதல் கட்டமாக தமிழ்நாட்டின் முக்கிய பெருநகரங்களிலும் மற்றும் பிரபலமான மின்-வர்த்தக செயல்தளங்களிலும் இப்புதிய தயாரிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது.  கூடிய விரைவில் தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய பெருநகரங்களிலும் மன்னா கோ கிரைன்ஸ் மால்ட் கிடைக்கும். 

அதிக விவரங்களுக்கு

https://www.mannafoods.in/https://www.facebook.com/mannafoodsindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *