எஃப்ஐசி சென்னை கிளை துவக்கம்

சென்னை, மார்ச் 30-

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  கவுன்சில் (எஃப்.ஐ.சி) தென்னிந்தியாவின் கிளை சென்னையில்  தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க உள்ள அந்நிய சிறு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மண்டலத்தில் சென்னை கிளையை தியாகராயநகர் ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில்  இந்தியாவுக்கான ஈக்வெடார் நாட்டின் தூதர் மேதகு திரு ஹெக்டர் புடா ஜெகோமி திறந்துவைத்தார்.

ஆசிய அரபு வர்த்தக அமைப்பின் இயக்குநர் (தென்னிந்தியா பகுதி) டாக்டர் ஆர்.எல்.கண்ணன், இந்திய பொருளாதார வர்த்தக கழகத்தின் தலைவர்  டாக்டர் ஆசிப் இக்பால், மற்றும் மலேசியா, தாய்லாந்து நாடுகளின் தூதரக அதிகாரிகள் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.  தென்னிந்தியாவில் முதலீடு செய்ய உலகம் முழுவதும் உள்ள வர்ததகர்கள்  மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக முதலீடுகளின் மையமாக திகழும்  தமிழகத்தில் முதலீடு செய்ய  அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய தென்னிந்தியாவில்  ஏராளமான  வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நாட்டில் தொழில் வளர்ச்சியில் வேகமாக மேலும் வளர்ந்து வரும் பகுதியாக  தென்னிந்தியா உள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள முதலீட்டார்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு ஒரு அமைப்பு  இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.  தமிழ்நாடு,. கேரளா மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர  எஃப்ஐசி எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பு  பாடுபட்டு வருகிறது.   தமிழ்நாட்டுடன் வர்த்தக உறவுகளை மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவ எஃப்ஐசி தயாராக உள்ளது. மேலும் அந்நிய நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் போது  சந்திக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கும் எஃப்ஐசி அமைப்பு உதவும்.

 

சென்னையில் உள்ள எஃப்ஐசி அலுவலகம் டெல்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்களுடன் இணைந்து  செயல்படும். மேலும் சென்னை , பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கு வரும் அந்நிய நிறுவனங்களுக்கும் உதவி செய்யும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  எஃப்ஐசி-யின் தென்னிந்தியாவுக்கான  புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் டி சரவணன் கூறினார்.   இந்தியாவில் தனிநபர், சிறு மற்றும் நடுத்தர அந்திய முதலீட்டாளர்களுக்கு உதவ எந்த வித ஏற்பாடுகளும் இல்லை.

எஃப்ஐசி  ஜப்பான், டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களுக்கு எஃப்ஐசி  உதவி செய்வதோடு அவர்கள் முதலீடு செய்வதற்கான சிறு திட்டங்களையும்  அடையாளம் காட்டுவதோடு உள்ளூர் இந்திய மக்களுக்கான முதலீட்டுக்கான அடித்தளத்தையும்  உருவாக்கித்தரும். இதன் மூலம் உள்ளூரில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். தனிநபர்கள் பலர் தங்களது ஓய்வூதியத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை எதிர்கொண்டுள்னர்.  ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை. ஆனால் எஃப்ஐசி அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

 பிரதமரின் தொலைநோக்கு பார்வையில் இடம்பெற்றுள்ள லத்தீன் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாங்கள் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறோம். வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து  நீடித்த மற்றும்  ஆழமான தொடர்புகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பின்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் உள்ளூர் அளவில் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவோம். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழ்க சந்தையை அணுகுவதற்கான வாய்ப்புகளை மேலும் எளிதாக்குவதோடு  வர்த்தக வாய்ப்புகளுக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கான  நிலையை உருவாக்குவோம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்புகளுக்hக தனிநபர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு உதவி செய்வோம் என்று ஆசிய அரபு வர்த்தக அமைப்பின் தென்னிந்தியாவுக்கான  இயக்குநர் டாக்டர் ஆர்.எல்.கண்ணன் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் அந்நிய நிறுவனங்கள் இடையேயான உறவுகளில் புதிய உச்சத்தை எட்ட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுடன் வலுவான  வர்ததக உறவுகளை  ஏற்படுத்துவதே எனது  குறிக்கோள் ஆகும். கோவை,. சேலம் போன்ற நகரங்களை உற்பத்திக்கான மையமாக மாற்ற நாங்கள் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேம். இதற்கான வாய்ப்புகளை நாங்கள் நிச்ச்யம் அடையாளம் காண்போம் என்று இந்திய பொருளாதார வர்த்தக கழகத்தின்  தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் கூறினார்.

 தமிழகத்திற்காக பல்வேறு  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக புதுடில்லியில் உள்ள தூதரக அலுவலகங்களின் உதவியோடு மாதந்தோறும் வட்டமேஜை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 

Dr. RL Kanan (Head of South Indian chapter FIC) can be contacted @ 9345691136 for any further information 

 

வெளிநாட்டு முதலீட்டு  கவுன்சில், மோஹித் ஸ்ரீவஸ்தவா, மொபைல் : 93100 73301

asianarabchamber@gmail.com

 

Chennai chapter of FIC goes on stream

CHENNAI: Foreign Investors Council (FIC) has set up its South India chapter and  has come up in Chennai.

It is ostensibly established to assist small foreign investors who are keen on participating in the growth story of South India, especially the Tamil Nadu region. The Chennai chapter was inaugurated by the Ambassador of Ecuador to India His Excellency Hector Gonzalo Cueva Jacome at Hotel Residency Towers here. The FIC itself came into being sometime ago.

The Director of Asian Arab Chamber of Commerce (South India Chapter),Dr. R.L. Kannan, the President of the Indian Economic Trade Organization, Dr. Asif Iqbal, and the Consul-Generals of Malaysia and Thailand were present at the inaugural ceremony of FIC in Chennai recently.

 “There is a huge interest in South India, especially Tamil Nadu, has been drawing huge interest as an investment hub among the investing community around the world.  An emerging region, south India offers immense scope for multilateral business opportunities with its broad-based manufacturing base. At the moment, however, investors from abroad have a redressal mechanism. Foreign Investors Council (FIC) is now ideally positioned to support the efforts of Tamil Nadu and Kerala in attracting overseas investment. IFC will play the facilitator role for foreign investors who wish to have trading relationships with the Tamil Nadu, and also address the problems, if any, they may be facing with various projects.

“The Chennai FIC office will work directly with various embassies in Delhi and bring opportunities to places such as Chennai, Bangalore and Hyderabad,” said Dr. D. Sarvanan, the newly-appointed Chairman of the Foreign Investors Council (FIC)in South India. “There is no mechanism in India for serving individual small and mid-size foreign investors in India, and FIC will hand-hold the small investors from Japan, Denmark, Sweden et al to identify smaller projects and create capital base for local Indian people that may help generate employment for smaller groups. Many pension funds from individuals are indeed looking at opportunities, and there is no agency that can help them. FIC is now keen to handhold such foreign investors.

“Latin American region and Middle East will be at the top of our priorities as per the Prime Minister’s vision. Through the council, we will continue to intensify and deepen our engagement with foreign investors on a sustained and regular basis. Our development partnerships will be guided by investor safety priorities. We will build as much local capacity and create as many local opportunities as possible. We will bring the Tamil Nadu market closer and make it easier and more attractive to trade with foreign investors. We will support our industries to collaborate with foreign investors,” said the Director of the Asian Arab Chamber of Commerce in South India, Dr. R.L. Kannan.

 “My goal is to build a stronger multilateral relation and work to reach new heights in the relationship between Tamil Nadu companies and the foreign investors. I will be focusing on the districts such as Coimbatore and Salem for manufacturing hubs. We will explore the opportunities in a structured fashion,” said Dr. Asif Iqbal, President of the Indian Economic Trade Organization.

Monthly round-table meetings will be conducted with focus on different foreign investment opportunities in Tamil Nadu with the support of embassies in New Delhi for better cooperation.

Dr. RL Kanan (Head of South Indian chapter FIC) can be contacted @ 9345691136 for any further information 

CONTACT INFORMATION:FOREIGN INVESTORS COUNCIL,,MOHIT SRIVASTAVA 93100 73301,asianarabchamber@gmail.com