வாழை நாரில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அணியும்போது உள்ளத்துக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

உலக தரம் வாய்ந்த துணிக் கடையை சென்னை அண்ணா நகரில் துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு!

பண்டிகை, திருமணம், வீட்டு விசேஷம் என்று எந்த நிகழ்வாக இருந்தாலும் பல வண்ண புத்தாடைகள் நம் எண்ணத்திலும் உள்ளத்திலும் ஊஞ்சலாடும்.

அந்த வகையில் மக்களின் ரசனைக்கு தகுந்த மாதிரி
இந்த விஜய தசமி நாளில் சென்னை அண்ணா நகரில் புதிய ஜவுளிக் கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர் பாபு அவர்கள் திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது, இந்த நிறுவனத்தை நடத்தும் ‘இக்கோ’ லைட் மற்றும் ‘சிந்திங்க’ நிர்வாகிகள் விஜய தசமி நாளில் இந்த நிறுவனத்தை துவக்கி உள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஆடைகள் அனைத்தும் வியக்க வைத்துள்ளன.

இதில் விசேஷமாக வாழை நாரில் தயாரிக்கப்பட்ட புடவைகள், வேட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் தனித்துவமாக உள்ளன.

இது நான் பார்க்காத, காதில் கேள்விப்படாத விஷயம்.

அதுமட்டுமல்ல, வாழை நாரில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அணியும்போது உள்ளத்துக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

அனைத்து ஆடைகளுக்கும் சர்வ தேச தரச் சான்று பெற்றுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் துவக்கப்பட்டுள்ள உள்ள இந் நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்’ என்றார்.
விழாவுக்கு வந்த அனைவரையும் ‘சிந்திங்க என்டர்பிரைசஸ் டி. வி. செம்மொழி மற்றும் ஊழியர்கள் வரவேற்றார்கள்.