மன்சூரலிகான் மகன் நாயகனாக அறிமுகமாகும்
“ கடமான்பாறை “
பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.
அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.
இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் புதியவர்கள்
ஒளிப்பதிவு – மகேஷ்.T
இசை – ரவிவர்மா
பாடல்கள் – சொற்கோ, ரவிவர்மா, மன்சூரலிகான்
கலை – ஜெயகுமார்
நடனம் – சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ்
ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.
படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…
காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக் கதை!
காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை.
பொண்ணுங்க கிட்ட இருக்கிற ஒண்ணு அவங்கள விட மத்தவங்களுக்குத் தான் அதிகமாகப் பயன்படும் அதுதான் கதை ! படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளோம்.