Cinematographer Om Prakash – Aramm Press Release

Cinematographer Om Prakash –

Any good story will reach its maximum intensity when it is told in the right mood and tone. ‘Aramm’ which has received tremendous response from the audience and critics alike,boasts of a brilliant technical team that rose to give the film a classy look. Om Prakash, the man behind the camera for ‘Aramm’ is being lauded by people from all the corners for his stupendous work which elevated the already wonderful product to another level. This venture is produced by Kotapadi J Rajesh. 
Speaking about ‘Aramm’, Cinematographer Om Prakash says, “ ‘Aramm’ is definitely one of the best movies of my career. When I first heard the story I instantly decided to use a lot of grey colour schemes to show the contaminated and lifeless Earth through the camera with specific lighting pattern, compositions, camera movement for this script. Nayanthara’s costume was also designed accordingly. The shooting locations and conditions were very tough. Instilling fear in the audience mind in the borewell sequences was very important . I used special lenses and lighting pattern to achieve the real depth and mood. This is my third movie I am working with Nayanthara. It is always a delight to work with such a dedicated artiste like Nayanthara following g ‘Arrambam’ and ‘Kashmora’. Her involvement and dedication is amazing. Director Gopi Nainar’s confidence in the script and his writing made this movie such a special one. ‘Aramm’ gives me pride and a sense of satisfaction that cannot be explained in words.
 
எந்த ஒரு தரமான கதையையும் மேலும் மெருகேத்தி அதன் தீவிரத்தை கூட்டுவதற்கு அக்கதையை படமாக்கும் விதமும் , உபயோகப்படுத்தப்படும் ஒளிப்பதிவு நுட்பங்களும் முக்கியமான பங்கு வகிக்கும். மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் என எல்லா தரப்பினரிடையும் பேராதரவு பெற்றுள்ள ‘அறம்’ படத்தின் எல்லா தொழில்நுட்ப  அம்சங்களும் பாராட்டுக்களை பெற்று வருகின்றன. இப்படத்தில்  ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவை பாராட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். 
 
அறம்’ குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பேசுகையில் , ” எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று ‘அறம்’. இப்படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே, அழிந்து வரும் நமது   பூமியின் அவல நிலையை சித்தரிக்க ‘ க்ரே ‘ கலரை பயன்படுத்தி , அதற்கான லைட்டிங்கை கொடுத்து, சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன் . இதற்கு ஏற்பதான் நயன்தாரா அவர்களின் ஆடையும் வடிவமைக்கப்பட்டது. வறண்ட பூமி, கடும் வெயில் போன்ற அம்சங்களால் படப்பிடிப்பு சிரமமாக இருந்தது. ஆழ்குழாய் காட்சிகளில் பயத்தை கொண்டு வருவது அவசியம். அதற்காக சில பிரத்தியேக லென்ஸை பயன்படுத்தினேன். நயன்தாராவுடன் நான் இணைந்து பணிபுரிவது இது மூன்றாவது படம். ‘ஆரம்பம்’ , ‘காஷ்மோரா’ படங்களுக்கு பிறகு இப்படத்தின் நயன்தாராவுடன் பணியாற்றியுள்ளேன் . அவர் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகையோடு பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமான அனுபவம். அவரது ஈடுபாடை  கண்டு அசந்துள்ளேன். இக்கதையின் மேல் இயக்குனர் கோபி நைனார் வைத்திருந்த நம்பிக்கையும் அவரது எழுதும் தான் இப்படத்தை இவ்வளவு சிறந்த படமாக்கியுள்ளது.வார்த்தைகளால் சொல்லமுடியாத திருப்தியையும் பெருமையையும் ‘அறம்’ எனக்கு கொடுத்துள்ளது “.
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *