*முதலமைச்சருடன் சென்னை பிரஸ் கிளப் கெளரவ ஆலோசகர் – தி டைம்ஸ் ஆப் இந்தியா ரெசிடெண்ட் எடிட்டர் திரு.அருண் ராம்..!*
21.08.2022 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல் துறை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஒருங்கிணைந்து சென்னை மாநகரில் வாகனமில்லா போக்குவரத்து, நடை பயிற்சி மற்றும் மிதிவண்டி பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை அண்ணா நகரில் நடத்திய ”மகிழ்ச்சியான தெருக்கள்” (Happy Streets) நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் CHENNAI PRESS CLUB / சென்னை பிரஸ் கிளப்கெளரவ ஆலோசகரும் – தி டைம்ஸ் ஆப் இந்தியா ரெசிடெண்ட் எடிட்டர் திரு.அருண் ராம், கலந்துக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில்
சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.கே.மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.