பரபரப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில்,  வெற்றி நடிக்கும் “இரவு”  திரைப்படம்!!!

பரபரப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில்,  வெற்றி நடிக்கும் “இரவு”  திரைப்படம்!!!

M10 Productions சார்பில், தயாரிப்பாளர் MS முருகராஜ் தயாரிப்பில் பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’  படப்புகழ் நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும், கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் “இரவு”. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார்.

வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள்னர்

.ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழுவினர்
தயாரிப்பு நிறுவனம் – M10 Productions
தயாரிப்பாளர் – MS முருகராஜ்
இயக்குநர் –  ஜெகதீசன் சுபு
ஒளிப்பதிவு –  ஸ்ரீனிவாஸ் தயாநிதி
இசை – அரோல் கரோலி
எடிட்டிங் –  CS பிரேம் குமார்
கலை – K மதன் குமார்
வசனம் –  பாபு தமிழ்
பாடல் வரிகள் –  ஞானகரவேல், கார்த்திக் நேதா, கருணாகரன்
ஸ்டண்ட் – ஃபயர் கார்த்திக்
நடனம் – பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு –  சதீஷ் ( AIM )