*பாராமெளன்ட் பிக்சர்ஸ் வழங்கும்* *TRANSFORMERS:RISE OF THE BEASTS*

*பாராமெளன்ட் பிக்சர்ஸ் வழங்கும்*
*TRANSFORMERS:RISE OF THE BEASTS*

பீஸ்ட் வார்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு, ஹஸ்ப்ரோ’ஸ் பொம்மை வரிசைகளை அடிப்படையாகக் கொண்டு, புகழ்மிக்க ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர் உருவாக்கப்பட்டது. இதுவரை, இத்தொடரின் ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் ஐந்து படங்களை இயக்குநர் மைக்கேல் பே (Michael Bay) இயக்கியுள்ளார். 2018இல் வெளிவந்த ஆறாவது படமான ‘பம்பல் பீ (Bumblebee)’ படத்தை மைக்கேல் பே தயாரிக்க, அப்படத்தை ட்ராவிஸ் நைட் இயக்கினார். ‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ எனும் இத்தொடரின் 7 ஆவது பாகம், பம்பல் பீ படத்தின் தொடர்ச்சியாகும்.

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர், தனது ஆறு பாகங்களின் மூலம் பிரமிக்கத்தக்க ஆக்ஷன் சாகசத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஏழாவது பாகம், தொண்ணூறுகள் காலகட்டத்தில் நடக்கும் உலகளாவிய சாகசத்திற்கு உறுதியளிக்கிறது. ட்ரான்ஸ்ஃபார்மர்களின் ஒரு பிரிவான மேக்ஸிமல்ஸை இப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவை, ஆட்டோ-பாட்ஸ்களுடன் இணைந்து உலகத்திற்கான எதிரான போரில் பங்கேற்கின்றன. கதையின் களம், ப்ரூக்ளினில் 1994 ஆம் ஆண்டு நிகழ்வதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நோவா (ஆந்தோனி ராமோஸ்) – முன்னாள் ராணுவ மின்னணுவியல் நிபுணரும், எலீனா – கலைப்பொருள் ஆராய்ச்சியாளரும், ஆப்டிமஸ் ப்ரைம் மற்றும் ஆட்டோ-பாட்ஸ்களுக்கு உதவி, மேக்ஸிமல்ஸ், ப்ரெடாகான்ஸ் (Predacons), டெரர்கான்ஸ் (Terrorcons) ஆகியோருடனான மும்முனை மோதலில், பூமிக்கு யுனிக்ரானை வரவிடாமல் தடுப்பதில் வெற்றி காண்கின்றனர்.

*CREDITS -*
ஒளிப்பதிவு – Enrique Chedjak
இசை – Jongnic Bontemps
இயக்கம் -Steven Caple Jr.

*_தமிழ், ஆங்கிலம், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில், ஜூன் 8 ஆம் தேதி அன்று இப்படத்தை, 2டி, 3டி, 4டி & ஐமேக்ஸ் வடிவங்களில் வெளியிடுகிறது வையாகோம் 18 ஸ்டுடியோஸ்._*