*பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் நடைபெற்றது

*பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் திருமணம் திரையுலகப் பிரமுகர்களின் வாழ்த்துகளுடன் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது*

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் ஹேமலதா தம்பதியரின் மகன் சந்தான கிருஷ்ணன் மற்றும் பிரவத் குமார் மிஷ்ரா-மாதுரி மிஷ்ரா தம்பதியரின் மகள் மனினி மிஷ்ராவின் திருமணம் சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையாட் நட்சத்திர விடுதியில் இன்று காலை 8.15 மணிக்கு இனிதே நடைபெற்றது.

மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

மணிரத்னம்-சுஹாசினி, ராஜீவ் மேனன், ரவிவர்மன், சிவகுமார், கார்த்தி சிவகுமார், ஜீவா, ஆர் டி ராஜசேகர், ஸ்ரீகர் பிரசாத், சுதா கொங்கரா, இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் மணிகண்டன், சாபு சிரில், ஏ ஆர் முருகதாஸ், மேனகா சுரேஷ், தயாரிப்பாளர் தாணு, காளிதாஸ் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர், சத்யஜோதி தியாகராஜன், சுரேஷ் பாலாஜி, பிரியதர்ஷன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமான முறையில் ரவி கே சந்திரன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 

***