ஷாருக்கானின் அடுத்த புது புராஜெக்ட் என்ன தெரியுமா?

ஷாருக்கானின் அடுத்த புது புராஜெக்ட் என்ன தெரியுமா?

சென்னை: நேற்று வெளியான நடிகர் ஷாருக்கானின் வீடியோ ஆன்லைன் உலகையே அதிர வைத்து விட்டது. வீடியோவில், அனைவரின் கனவுகளையும் நனவாக்க தான் தயாராகி வருவதாக ஷாருக்கான் கூறி இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவரது இந்த வீடியோ எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்வதில் ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். இது ஒரு புதிய டாக் ஷோவாக இருக்கலாமோ, வசீகரிக்கும் விளம்பரமா அல்லது புத்தம் புதிய சீரிஸாக கூட இருக்கலாம் என்று பல்வேறு யூகங்களை செய்து வருகின்றனர். இத்தகைய யூகங்களுடன், ஷாருக்கானின் அடுத்த இந்த புதிய பெரிய புராஜெக்ட் என்ன என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த வீடியோ பின்வரும் இணைய பக்கங்களில் இடம்பெற்றுள்ளது: