Honouring legends of the Film Industry at the AGM

பிலிம்சேம்பர் பொதுக்குழுவில்
முக்தாசீனிவாசன்,
ரமேஷ்பிரசாத்,
ஆர்.எஸ்.பிரபு மூவருக்கு
பாராட்டு!
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் தியாகராய நகரில் உள்ள ஆந்திராகிளப் வளாகத்தில் 24.9.17 அன்று காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தா எல்.சுரேஷ் தலைமை தாங்கினாரர். செயலாளர்கள் ரவிகொட்டாரக்கரா என்.ராமசாமி இருவரும் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் முக்தாசீனிவாசன் (தமிழ்)
ரமேஷ்பிரசாத் (தெலுங்கு)
ஆர்.எஸ்.பிரபு (மலையாளம்) ஆகியோரின் சேவையைபாராட்டி பிலிம்சேம்பர் சார்பில்  வெள்ளியால் ஆன நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கன்னட பட உலகை சார்ந்த பக்தவத்சலாவிற்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.
அவர்களை வாழ்த்தி திரையுலகினர் பேசினர். பொருளாளர் கிருஷ்னாரெட்டி இந்த ஆண்டு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். அதற்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது.
சேம்பரின் முன்னாள் தலைவர்கள் கல்யான், திருப்பூர் சுப்ரமணியம், சேம்பர் துணைத்தலைவர்கள் ஏவிஎம். சண்முகம் சாய்பிரசாத், கணேஷ், மாதவன்நாயர், நடிகர்சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், டிஜிட்டல் பிலிம்ஸ் அசோசியேசன் தலைவர் கலைப்புலிசேகரன், மற்றும் சிவசக்திபாண்டியன், அன்பாலயாபிரபாகரண்
கே.எஸ்.சீனிவாசன், ராதாகிருஷ்ணன், ருக்குமாங்கதன், ஷாகுல்அமீது, முருகன், விஜயமுரளி,  நடிகர்கள் மோகன், மன்சூரலிகான், நடிகை குட்டிபத்மினி உட்பட நான்கு மொழிகளை சார்ந்த தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்தாசீனிவாசன்
ரமேஷ்பிரசாத்
ஆர்.எஸ்.பிரபு மூவரும் நன்றி தெரிவித்து பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *