லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்க, ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா டாக்டர் ராஜசேகர், செந்தில்,தம்பி ராமையா நடிப்பில் விஷ்ணு ரங்கசாமியின் கதை வசனத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் லால் சலாம் விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளது விமர்சனத்தை பார்ப்போம் .
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஒற்றுமையாகவும் அண்ணன், தம்பியாக ஒரு தாய் பிள்ளையாக பாசமாக பழகி வருகின்றனர்.மொஹிதீன் பாய் ( ரஜினிகாந்த்) தனது இந்து மத நண்பரின் ( லிவிங்க்ஸ்டன்) மகனையும் தன் மகன் போல் பாசமாக வைத்திருந்தார் . அந்தக் கிராமத்தில் இருந்து சிறு வயதில் மும்பை சென்று அங்கு பெரிய தொழிலதிபராக செல்வாக்கு மிக்க மனிதராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினி) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தால் சண்டையிட்டு கொள்வார்கள் கீரியும் ,பாம்பும் இருக்கிறார்கள் இருவரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள்
அந்த கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது போட்டியில் அரசியலில் இரு வேறு கட்சிகளில் இருக்கும் இந்து அரசியல்வாதிகள் இவர்களுக்குள் சண்டையை பெரிதாக்கி குளிர்காய மோதல், உருவாக்கி பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகி வந்த இந்து – முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுத்தி விடுகிறது.
இந்த சமயத்தில் கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த திருவிழாக் கொண்டாட ஊருக்கு என்று சொந்தமாக தேர் இல்லாத நிலையில் பக்கத்து ஊரில் தேர் கடன் வாங்கி திருவிழா கொண்டாட இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா நிறுத்தப்படுகிறதுஇந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டதா? தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதே ‘லால் சலாம்’.
இப்படி ஒரு கதைக்களத்தை திரைப்படுத்தியதற்கே முதலில் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சலாம் போடலாம் இதுவரை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல படங்கள் வந்துயிருந்தாலும் எந்த மதத்தை வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் பார்வையாளர் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனமாக இருந்துள்ளது இயக்கத்துக்கு பெருமை சேர்த்து விடுகிறார்.
படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் – விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டு வினையாவது இதெல்லாம் எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது என்பதை சொல்கிறது. பிற்பகுதி இதற்கு நல்ல சரியான தீர்வு தருகிறது.
படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் மொத்த படத்திலும் ஒரு கலக்கு கலக்குகிறார், ரஜினி.
படத்தில்அவரது அறிமுக காட்சிக்கே மாஸ்ஸாக தியேட்டரை அதிரவைக்கும் அந்த கேரக்டரில் அவரது நடிப்பு பக்குவமும் இணைந்து கேரக்டரை பெருமைப் படுத்தி விடுகிறது. மதநல்லிணக்கம் தொடர்பாக அவர் பேசும் வசனங்கள் அனைத்துக்கும் கவனிக்கப்படுகிறது
கிரிக்கெட் மைதானத்தில் மைக்கில் பேசுபவரை அழைத்து அப்படி பேச கூடாது ஒரு மதத்தை உயர்த்தி பிற மதத்தை தாழ்த்தி பேச கூடாது சொல்வதும் பேசுவது, இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே அமைதியை ஏற்படுத்த நடக்கும் கூட்டத்தில் பேசுவது நம் மனதில் நின்று நிலைக்கிறார்.
வருடத்துக்கு ஒருமுறை திருவிழா சமயத்தில்தான் மகனும் மருமகளும் பேரப் குழந்தைகளும் அழைத்துக் ஊருக்கு வருவார்கள் என்ற நிலையில் இனி அதற்கு வாய்ப்பில்லை ஊருக்குள் தேர்திருவிழா இனி நடக்காது என்ற நிலையில் மனவேதனையுடன் கோவில் பூசாரி ( செந்தில்) மரணமடைகிறார். மனத்தில் நிற்க்கும் காட்சிகள்
இந்த நிலையில் பல்வேறு இடங்களுக்குள் போய் கிரிக்கெட் விளையாடி பணம் சேர்த்து தேருக்கு ஏற்பாடு செய்து ஊதாரியாக சுற்றி திரிந்த பசங்க பொறுப்பான ஊருக்கு நல்லது செய்யும் காட்சிகள் அருமை
கிரிக்கெட் விளையாட்டு காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது
நடிகர்.விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பு சிறப்பான தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்
தம்பி ராமையா நடிப்பு அருமை
கபில்தேவ் ஒரு சில காட்சிகள் வந்து போகிறார்.
ரஜினிக்கு ஜோடி நிரோஷா பொருத்தமாக இருந்தது
விஷ்ணு விஷால் அம்மாவாக ஜீவிதா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் தன் கதாபாத்திரம் அருமையாக நடித்துள்ளார்
இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு : ஒளிவீச்சு எல்லா இடத்தில் அருமையாக பதிவு செய்துள்ளார்
ஏ ஆர் ரகுமான் இசையில் தேர்த் திருவிழா பாடல் அருமை .
எடிட்டர் : வெட்டுதல் ஒட்டுதல் கனகர்ச்சிதமாக நேர்த்தியாக செய்துள்ளார்
கிளைமாக்ஸ் தரும் மத நல்லிணக்க காட்சி யாரும் எதிர்பார்க்காத நெகிழ்ச்சிக்காகவும் இருந்தது ..
இப்படம் மத நல்லிணக்கத்துக்கு போடும் …லால் சலாம் …குடும்பத்துடன் பர்க்கும் படமாக உள்ளது.