மடிக்கணினி சந்தையில் விரிவாக்கம் புரியவுள்ள சென்னையை சேர்ந்த ஹாலோவேர் நிறுவனம்

மடிக்கணினி சந்தையில் விரிவாக்கம் புரியவுள்ள சென்னையை சேர்ந்த ஹாலோவேர் நிறுவனம்

02 மே 2024, சென்னை, இந்தியா : கணிப்பொறி உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஹாலோவேர் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது மேஜை கணினி, டேப்லேட்கள், சிறிய ரக கணினிகள் மற்றும் ஒர்க் ஸ்டேஷன்கள் போன்ற தயாரிப்புகளை தயாரித்து வழங்குகிறது.. தங்கள் விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக தற்போது மடிக்கணினி விற்பனை துறையில் நுழைவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் ஹாலோவேர் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திரு ராகவேந்திரா கணேஷ், 4 புதிய வகை மடிக்கணினிகளையும் 1 டேப்லட் வகை கணினியையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
மாணவர்களுக்கான “கிஸ்மோஸ் எடுகேஷன்“ கல்வி மடிக்கணினி, பணிபுரியும் நிபுணர்களுக்கான “கிஸ்மோஸ் எக்ஸிகியூட்டிவ்”பணி மடிக்கணினி மற்றும் விளையாட்டு பிரியர்களுக்கான “கிஸ்மோஸ் பியரி” விளையாட்டு மடிக்கணினி, கடினமான தொழில்துறை தர வேலைகளுக்கான “கிஸ்மோஸ் ரக்டு” மடிக்கணினி என 4 வகையான மடிக்கணினிகளையும் மற்றும் 1 டேப்லட் வகை கணினியையும் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த புதிய தொடர் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்கள் ஹாலோவேரின் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறையில் கவனம் செலுத்தி ஹாலோவேர் தனது சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலோவேர் நிறுவனம் ஹாலோகிராபிக் கணினிகளை புதுமைப்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்டது, ஹாலோகிராபிக் கணினி என்பது வழக்கமான கணினி திரை போல் அல்லாமல், கணினிகளில் வழக்கமாக செய்வது போன்ற தொடுதல், உணர்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய தொழில்நுட்பங்களுடன் காற்றை திரையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுவதாகும். மேலும் 20 பிரத்யேக அனுபவ மையங்களை துவங்கவுள்ளதாகும், ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் வளர்ச்சி 200% சதவீதமாக அதிகரித்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹாலோவேர் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திரு ராகவேந்திரா கணேஷ் கூறுகையில், எங்கள் வணிக விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக இன்று இந்தியாவின் மடிக்கணினி விற்பனை சந்தையில் அடியெடுத்து வைப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஹாலோவேர் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் “மேட் பார் தி வேர்ல்ட்” என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர் உற்பத்தியாளர்களில் முன்னணியில் இருக்கும் “மேட் இன் இந்தியா” நிறுவனங்களில் ஒன்றாக இருக்க நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் ஹாலோவேர் கணினி வன்பொருள் துறையில் கவனம் செலுத்த அதன் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை இயக்குகிறது” என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இன்று எங்களது தனித்துவமான 4 புதிய வகை மடிக்கணினிகளாகிய கிஸ்மோஸ் எடு, கிஸ்மோஸ் எக்ஸிகியூட்டிவ், கிஸ்மோஸ் பியரி, கிஸ்மோஸ் ரக்டு மற்றும் ஒரு புதிய டேப்லெட்டை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கார்ப்பரேட் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “கிஸ்மோஸ் எக்ஸிகியூட்டிவ்” மடிக்கணினி, சிறந்த செயல்திறன், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பை வழங்குகின்றன, தடையற்ற உற்பத்தித்திறனை உறுதி செய்கின்றன. கல்வி பயிலும் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “கிஸ்மோஸ் எடு” மடிக்கணினி, கற்றல் சூழல்களை ஆதரிக்க வலுவான கல்விக் கருவிகள் மற்றும் மென்பொருளைக் கொண்டிருப்பதுடன், மாணவர்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “கிஸ்மோஸ் பியரி” மடிக்கணினி, அதிநவீன கிராபிக்ஸ், அதிவேக செயலாக்கம் மற்றும் குளுமைப்படுத்துதல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் இணையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன கடினமான தொழில்துறை தர வேலைகளுக்கான “கிஸ்மோஸ் ரக்டு” மடிக்கணினி மற்றும் ரக்டு டேப்லெட்டுகள் செயல்படுகின்றன.” என்று கூறினார்.
ஹாலோவேர் நிறுவனம் பற்றி:
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹாலோவேர் நிறுவனம், கணினி உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். கடந்த 2020ம் ஆண்டு துறைசார் வல்லுநர் திரு ராகவேந்திரா கணேஷ் அவர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் மேஜை கணினி, டேப்லேட்கள், சிறிய ரக கணினிகள் மற்றும் பணிநிலையங்கள் போன்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு தற்போது இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் வலைப்பின்னல் உள்ளது. கணினி உற்பத்தி துறையில் இந்தியாவில் ஹாலோவேர் நிறுவனத்திற்கு சொந்தமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சென்னையில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Media Contact: P.Dhamodharan – 9790844320 / info.chennaipr@gmail.com