தேவா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கேப்டன். சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “மாடன் கொடை விழா”.
இப்படத்தில், கோகுல் கெளதம், ஷாருமீஷா, சூரிய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீ ப்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆர் தங்கபாண்டி படத்தினை இயக்கியிருக்கிறார். சின்ராஜ் ஒளிப்பதிவில் விபின் “மாடன்” படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு விஜயமுரளி / கிளாமர் சத்யா
இப்படத்தினை தமிழகமெங்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி இராம நாராயணன் வெளியிடுகிறார்
கதை
தென் தமிழகத்தில்புகழ் பெற்ற சுடலை மாடன் கோயில் இங்கு வருட வருடம் திருவிழாவில் நடனம் ஆடும் திருநங்கை மாதவி மர்ம நபரால் கொள்ள படுகிறார் .
சென்னையில் வேலை செய்து கொண்டு வரும் கதாநாயகனை அவரது சித்தப்பா அவரது பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை என கூறி அவரை ஊருக்கு அழைத்து வருகிறார். கதாநாயகன் ஊருக்கு வந்த பிறகு சுடலைமலை சாமிக்கு கொடைவிழா நடத்தவேண்டிய ஊர் மக்கள் முடிவு செய்தனர் சுடலை மாடன் சாமி இருக்கும் இடத்தை கதாநாயகன் அப்பா உடல்நலம் சரியில்லாதபோது ஏழு வருடம் முன் 2 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளார். அந்த இடத்தை மீட்கபோகும்போது அநியாயமாக 30 லட்சம் கொடுத்தால் இடத்தை தருவதாக வில்லன் (ஞானமுத்து) சொல்கிறார்.ஊர் பெரியவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்தும் பணிந்து வராத ஞானமுத்துவிடம் வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த வாக்குவாதம் சண்டையாக மாறி ஞானமுத்துவின் வலது கரமாக விளங்கும் நபர் கொல்லப்படுகிறார். அந்த கொலை முருகன் மீது விழுகிறது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கதாநாயகன் முருகன் சிறையில் இருந்து வெளியே வந்தரா? கோயில் இடத்தை மீட்டு சுடலை மாடன் சாமிக்கு கொடைவிழா ஊர் மக்கள் நடத்தினார்களா? இல்லையா? திருநங்கை மர்மமான முறையில் கொன்று கிணற்றி வீசியது யார்? படத்தின் மீதிக்கதை..
கதாநாயகனாக கோகுல் கௌதம் கிராமத் இளைஞர் புதுமுகமா என்று தெரியவில்லை பல படங்களில் நடித்து அனுபவம் பெற்ற நடிகராக நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் இறுதிக் காட்சியில் சுடலை மாடன் வேடம் அணிந்து நடனமாடும் காட்சி பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார் .
கதாநாயகியா கஷாருமிஷா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்
சூப்பர்குட் சுப்ரமணி நடிப்பு சிறப்பாக இருந்தது மற்றும் இதில் நடித்த சூரிய நாராயணன், ஸ்ரீப்ரியா அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சின்ராஜின் ஒளிப்பதிவு கிராம த்தின் மண்ணையும அந்த ஊர் மக்கள் அழகா படம் பிடித்து காட்சி படுத்தி யுள்ளார் படத்தின் பெரியபலம்.
விபினின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் சூப்பராக கொடுத்துள்ளார்.
இதில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துயுள்ளனர்
தமிழகத்தின் தென்பகுதிகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும்படியான படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் தங்கபாண்டி தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள். இப் படம் குடுபத்துடன் அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது.