வெற்றித் திருமகனே விடைபெறு!

வெற்றித் திருமகனே விடைபெறு!

****************************************** மனோஜ் 

பலமுறை உங்களிடம் பேசி இருக்கிறேன்

ஒருமுறை கூட பாரதிராஜாவின் மகனென்ற தோரணை தெரிந்ததே இல்லை!

நீங்கள்

இயக்குனர் இமயத்தின் மகன் என்றாலும்

உங்களை நான் சந்தித்த போதெல்லாம்

என்னை இயக்குனராகவே மதித்திருக்கிருக்கிறீர்கள்!

நீங்கள்

வெற்றியடையாமல் இருந்திருக்கலாம்,

ஆனால்

நீங்கள்

தொல்வி அடைந்தவனல்ல!

உன் இறுதி அஞ்சலிக்கு

தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

பாஜக தலைவர் அண்ணாமலை!

தவெக தலைவர் விஜய்!

தேமுதிக தலைவர் பிரேமலதா!

அண்ணன் சீமான்!

அய்யா நெடுமாறன்!

சசிகலா அம்மையார்!

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்!

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,

முன்னாள் அமைச்சர்கள்

கடம்பூர் ராஜு, விஜய் பாஸ்கர்,

செல்லூர் ராஜூ!

இயக்குனர்கள் பாக்யராஜ்

பார்த்தீபன், செல்வமணி, விக்ரமன்,

P.வாசு, வெற்றிமாறன், அகத்தியன்,

தங்கர் பச்சன் பாண்டியராஜன், KS.ரவிக்குமார, லிங்குசாமி,சித்ரா லட்சுமணன், எழில்

சரவண சுப்பையா, கதிர், C.ரங்கநாதன்,

நடிகர்கள் சத்யராஜ், சூர்யா,

வாகை சந்திரசேகர், விஜய் ஆண்டனி, அண்ணன் கவுண்டமணி,யோகி பாபு , தேவயானி, ராதிகா, வடிவுக்கரசி இப்படி பல பிரபலங்கள்

மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்களின் இறுதி அஞ்சலிக்கே வருவார்கள்!

இவர்கள் அனைவரும்

உன் இறுதி அஞ்சலிக்கு வந்திருக்கிறார்கள்!

மனோஜ் நீ வாழும்போது

வெற்றியை தொடா விட்டாலும்

இறக்கும்போது

மிகப்பெரிய சாதனையாளனாகவே

இறந்திருக்கிறாய்!

உனக்கு நடந்தது

இறுதி ஊர்வலம் அல்ல!

வெற்றி ஊர்வலம்!

எங்களிடம் இருந்து விடை பெறுவது

வெற்றி நாயகன் மனோஜ்!

வெற்றித் திருமகனே!

விடைபெறு!

 

#இயக்குனர்_பேரரசு