“குமாரசம்பவம்” திரை விமர்சனம்.

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே.கணேஷ் தயாரித்திருக்கும் குமாரசம்பவம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.

நடிகர்கள்

இதில் குமரன் தங்கராஜன் – குமரன், பாயல் ராதாகிருஷ்ணா – பவித்ரா, ஜி.எம். குமார் – சுப்பையா பிள்ளை, குமாரவேல் – வரதராஜன், பாலா சரவணன் – சத்யா, வினோத் சாகர் – வினோத், லிவிங்ஸ்டன் – திரைப்படத் தயாரிப்பாளர், வினோத் முன்னா – அமுதன், சிவா அரவிந்த் – காளிகாம்பர், கௌதம் சுந்தரராஜன் – வழக்கறிஞர், அர்ஜெய் – ஜிஎன், சார்லஸ் வினோத் – அமர்நாத், விஜய் ஜாஸ்பர் – அக்பர் பாஷா, சரவணன் – அந்தோணி ஆசீர்வதம், கே.கோபால் – போலீஸ், டெலிபோன் ராஜ் – போலீஸ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ் – விச்சு, வி.தாரணி – நந்தினி, கவிதா – சரஸ்வதி, ஷ்ரவன் ராமகிருஷ்ணன் – பெரியவன்,யஷ்வன் ரமேஷ் – தமிழ் செல்வன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்  இசை: அச்சு ராஜாமணி, ஓளிப்பதிவு: ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி, எடிட்டர்: ஜி.மதன், கலை இயக்குனர்: கே.வாசுதேவன், ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி நெடுமாறன், ஸ்டண்ட்: ஓம் பிரகாஷ், பாடல் வரிகள்: பாலாஜி வேணுகோபால், ஒலி வடிவமைப்பு: டி. உதய் குமார், ரஞ்சித் வேணுகோபால், எம். சரவணகுமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோஸ்), ஒலிக்கலவை: டி.உதய் குமார், விஎஃப்எக்ஸ்: சான் எஃப்எக்ஸ் – சந்துரு செந்தில்குமார், டிஐ வண்ணம்: நவீன் சபாபதி, டிஐ: ஷேட் 69 ஸ்டுடியோஸ், காஸ்டிங் இயக்குனர்: வர்ஷா வரதராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.​

படத்தை பார்ப்போம்

சென்னையில் சினிமா டைரக்டர்  ஆசையில் குமரன்  தன் தாத்தா தாய் மற்றும் தங்கையுடன் பெரிய சொந்த வீட்டில் வசித்து வருகிறார். குமரன்  வீட்டை விற்க முயற்சி செய்ய , அதே வீட்டில் வாடகை குடியிருக்கும்  இளங்கோ குமரவேல் ஒரு சமூக போராளி என்பதால் நிறைய சமூகவிரோதிகள்  மற்றும் பணக்காரர்களின் பகைமையை சம்பாதித்து வைத்திருக்கிறார்.  இளங்கோ குமரவேல் இறந்து கிடக்க, வீட்டை விற்க முடியாமல் மொத்த குடும்பமும் போலீஸ் விசாரணையில் சிக்குகிறது. போலீஸ் அதிகாரி  சிவ அரவிந்த் சந்தேகப்பார்வை குமரன் மீது அவர் குடும்பத்தார்  மீது திரும்புகிறது. இளங்கோ குமரவேல் ஏற்கனவே அந்த ஏரியாவில்  இருக்கும் முக்கியஸ்தர்கள் பணக்காரகள் கல்லூரி முதல்வர்கள், ரௌடிகள் என்று எல்லோரும் இவருக்கு எதிரிகள்  அதனால், இவரை கொன்றது யார்?  போலீஸ்  குற்றவாளி கண்டு தீவிரமாக தேடுகிறது இன்னொரு பக்கம் நாயகன் குமரன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குற்றவாளி கண்டுபிடிக்க கிளம்புகிறார். இறுதியில்  உண்மையான கொலையாளி யார் ? டைரக்ட்ராக ஆசையில் இருக்கும் குமரனா ? இளங்கோ குமரவேலின் இவரின் எதிரிகளாக குற்றவாளி  போலீஸ் கண்டுபிடிக்க முடிந்ததா?   வீட்டை விற்க முடிந்ததா? சினிமா டைரக்டர் ஆசை  பலித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

குமரன் தங்கராஜ் அறிமுக நாயகனாக இப் படம் முழுவதும் அவரின் எதார்த்தமான  நடிப்பு காமெடியில் கலகலப்பையும்  விறுவிறுப்பையும் கொடுத்து அசத்தியுள்ளார்.

ஜி.எம்.குமார்,  முக்கிய கதாபாத்திரத்தில்  சிறப்பாக நடிப்த்து படத்திற்கு பலம் அனைவரின் கவனத்தை பெறுகிறார்.

நாயகி பாயல் ராதாகிருஷ்ணனும்  தனக்கு கொடுத்து கதாபாத்திரத்திம் சிறப்பாக நடித்து ள்ளார்

இளங்கோ குமரவேல் சில காட்சிகள் வந்தாலும் எல்லோரும் மனதிலும் இடம் பிடிக்கிறார்

வினோத் சாகர், பாலசரவணன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், பாயல் ராதாகிருஷ்ணன், லிவ்விங்ஸ்டன், கௌதம் சுந்தரராஜன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், அர்ஜெய், விஜய் ஜாஸ்பர், சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி  மற்றும் இவர்களுடன் நடித்த நடிகர் அனைவரின் பங்களிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்தது

அச்சு ராஜாமணியின் இசை மற்றும் பின்னணி இசை, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு, ஜி. மதனின் படத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின் பணி சிறப்பாக இருந்தது

குமாரவேல் மரணம், காவல்துறை விசாரணை, காதல், பிரச்சனைகள், எதிரிகள் பட்டியல், குமரன் குழு துப்பறிவது,  என்று முதல் பாதியை விட இரண்டாம் பாதி காமெடி கலாட்டாக்களில் நிறைந்து பல திருப்பங்களுடன் ஜாலியும் விறுவிறுப்பையும் நகைச்சுவையையுடன்   இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.மொத்தத்தில்  குமார சம்பவம் –பல சம்பவங்களை  திரைக்கதையில் கொடுத்து  எல்லோரும்   ரசிக்கும்படியாக உள்ளது

**