ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘வாட்ஸ் அப்’..!

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான்.

இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர ‘அஞ்சல்’ மோகன் – ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய் – ரக்ஷிதா, காதல் சுகுமார் – லாலித்தியா என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர்.

இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், எங்கிருந்தோ வந்த ஒரு தனியார் அமைப்பு தங்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைவதை கண்டு பொங்கி எழுகின்றனர்..

அலங்காநல்லூரில் அவர்கள் போராட்டத்தின் வீச்சு குறைவாக இருக்கவே, போராட்டக்களத்தை சென்னை மெரீனா பீச்சுக்கு மாற்றுகின்றனர்.. அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.. வரும் நவம்பர் -15ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தொழிநுட்ப கலைஞர்கள் விபரம்

இயக்கம் : A.R. ரஷீத்

இசை : JV

ஒளிப்பதிவு : பெட்ரிக்

தயாரிப்பு : ஷஜினா ஷஜின் மூவிஸ் & SPK Films சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *