ஜே ஸ்டுடியோஸ்; சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் காயல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தமயந்தி
இதில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா கிருஷ்ணன், ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : கார்த்திக் சுப்ரமணியம், படத்தொகுப்பு : பி.பிரவீன் பாஸ்கர், இசை : ஜஸ்டின் , மக்கள் தொடர்பு : குணா
படத்தை பார்போம் ;
போலீஸ் உதவி கமிஷனர் ஐசக் வர்கீஸ் மனைவி யமுனா (அனுமோல்) மகள் தேன்மொழி (காயத்ரி சங்கர்), அமெரிக்காவில் வேலை செய்யும் மகன் என்று அழகான குடும்பம். தந்தையின் பாசத்துடன் தேனு தைரியமான பெண். கீழ் சாதியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆதி தமிழ் நாயகன் (லிங்கேஷ்) என்பரை காதலிக்கிறார் தேனு. இதற்கு அப்பா முழு சம்மதம் தர, அம்மா யமுனா எதிர்ப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்து அவளது விருப்பத்திற்கு மாறாக உறவுக்காரனுக்குக் கழுத்தை நீட்டும் மகள், பிடிக்காத வாழ்க்கை வாழ விரும்பாமல் தற்கொலை செய்து கொள்ளும் மகள்,குற்ற உணர்ச்சியால் தவிக்கும் பெற்றோர்கள்
மரணத்திற்கு முழு பொறுப்பு தன் மனைவி தான் என்ற கோபத்தில் ஐசக் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து பேசுவதை தவிர்க்கிறார். மகன் சமரசம் செய்ய முயற்சித்து தோல்வியடைந்து தன் நண்பன் மனநல மருத்துவர் ரமேஷ்திலக்கின் ஆலோசனை படி தேனுவின் அஸ்தியைக் கரைக்கவும் பாண்டிச்சேரியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சாலை பயணமாக மேற்கொண்டால் இந்த பயணத்தில் பெற்றோர்கள் மனம் மாறுவர்கள் குடும்ப நண்பரும் மனநல மருத்துவர் ரமேஷ் திலக்கின் நம்பிக்கை காரில் பயணமாகிறார். மகன் திடீரென்று அவசர வேலையாக அமெரிக்க செல்ல நேரிடுகிறது. அதன் பின் இந்த சாலை பயணத்தில் தேனுவின் முன்னாள் காதலன் ஆதி தமிழை சந்திக்கிறார் ஐசக். தேனுவின் மரண செய்தியை கேள்விப்பட்டு மணமுடைந்து போகிறார் ஆதி தமிழ். இந்த சமயத்தில் மருத்துவ ர்ரமேஷ் திலக்கிற்கு அவசரமாக கேரளா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட, ஆதி தமிழ் ,ஐசக் மற்றும் யமுனாவுடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த பயணத்தில் சாதி பாகுபாடு பார்க்கும் யமுனா தன் மகளின் முன்னாள் காதலனை கண்டதும் என்ன செய்கிறார்? இவர்கள் மூவரும் சேர்ந்து தேனுவின் அஸ்தியை ராமேஷ்வரத்தில் கரைத்தார்களா?’. காதலியைப் பிரிந்த நாயகன் வாழ்க்கை என்ன ஆனது? மகளைப் பலி கொடுத்த தாய் மனம் திருந்தினாரா, இல்லையா? போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பதே படத்தின் மீதி கதை ..
துடிப்பான இளைஞராக வரும் லிங்கேஷ், ஆதி தமிழ் கதாபாத்திரத்தில் இன்னொரு காதல் என்பதை ஏற்க மறுக்கும் காட்சிகளிலும், தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார்
தேனு வாக (காயத்ரி சங்கர்) கதையின் முக்கிய மையப்புள்ளியாக போலீஸ்காரர் மகளாக இருக்கும் தாயின் கண்டிப்பிற்கு எதிர்குரல் கொடுக்க முடியாமல் திருமணம் செய்து கொண்டு எடுக்கும் விபரீத முடிவில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
யமுனா என்ற கதாபாத்திரத்தில் அனுமோல் அற்புதமாக நடித்துள்ளார்.படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பேசுகிறவர் பிற்பாதியில் பேசாமலேயே தனது நடிப்பை கொடுத்து உள்ளார்.
மனநல மருத்துவராக ரமேஷ் திலக் ஒவ்வொரு காட்சியிலும் உயரத்திற்குகேற்றவாறு மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.
மற்றும் ஸ்வாகதா கிருஷ்ணன், ரேடியோ சிட்டி பரத் நடிப்பில் குறையில்லை.
படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவும், இசையும்தான். ஒளிப்பதிவாளர் கார்த்தி காட்சிகளை அழகுணர்வுடன் வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.ஜஸ்டினின் பாடல்கள் கேட்க வைக்கும் ரகம் –
நடிகர்களின் நடிப்பாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தமயந்தி. கதைக்களம் காதல், சாதி, பயணம் போன்ற அம்சங்கள் அடங்கிய கதையை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். சில நேரம் காட்சிகள் நகர்வது நிகழ்காலமா கடந்த காலமா என்று குழம்ப வைக்கிறது. இன்றைய சமூகத்துக்குத் தேவையான கதை.