*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.*

*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.*

இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது.

சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.

ஊக்கமூட்டும் இந்த வாழ்க்கை வரலாறு, மறக்கமுடியாத திரை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாகிறது.

தயாரிப்பு நிறுவனம் – சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ்

படத்தலைப்பு – *மா வந்தே*

எழுத்து & இயக்கம் – *கிராந்தி குமார் CH*

தயாரிப்பாளர் – *வீர் ரெட்டி M.*

ஒளிப்பதிவு – *கே. கே. செந்தில் குமார் ISC*

இசை – *ரவி பஸ்ரூர்*

எடிட்டிங் – *ஸ்ரீகர் பிரசாத்*

ஆர்ட் டைரெக்டர் – *சாபு சிரில்*

ஆக்ஷன் – *கிங் சாலமன்*

நிர்வாக தயாரிப்பாளர்கள் – கங்காதர் NS, வாணிஸ்ரீ B

லைன் புரொடியூசர் – TVN ராஜேஷ்

கோ-டைரக்டர் – நரசிம்ம ராவ் M