வன்னியர் சத்திரியர் கூட்டு இயக்கம் சார்பில் தலைவர் சி.ஆர்.ராஜன் தலைமையில தியாகி ராமசாமி படையாச்சி பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரி சந்திப்பில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுக்கு நன்றி கூறும் வகையில் இந்நிகழ்ச்சியில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு, வன்னியர் சங்க தலைவர் நடராஜன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ராமதாஸ் மற்றும் சமூக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.