Every aspect about a highly anticipated movie will be viral and a hit. ‘Velaikkaran’ starring Sivakarthikeyan, Nayanthara, Fahadh Faasil, directed by Mohan Raja is one such movie and every announcement and release from the ‘Velaikkaran’ team is lapped up by the fans and audience. This movie is produced by R D Raja for ‘24AMSTUDIOS’. ‘Velaikkaran’ has












The camerawork of ‘Velaikkaran’ is done by Ramji, editing by Ruben and Art Direction by Muthuraj.



மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பேராதரவு பெற்று கொண்டாடப்படும். சிவகார்த்திகேயன் , நயன்தாரா , பகத் பாசில் நடிப்பில் , மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வேலைக்காரன் ‘ படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தை ’24AMSTUDIOS’ நிறுவனத்தின் சார்பில் திரு. R D ராஜா தயாரிருக்கின்றார். அனிருத்தின் இசையில் இப்படம் உருவாகிவருகிறது. ‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் ‘இறைவா’ சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. யு டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டி மேலும் பலமாக கலக்கிக்கொண்டு வருகிறது இப்பாடல் என்பதே தற்போதய செய்தி. வெகு சில பாடல்களே இந்த சாதனையை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து Post Production பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றது. ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்ததை ‘வேலைக்காரன் ‘ படக்குழுவினர் நவம்பர் 17 ஆம் தேதி கொண்டாட உள்ளனர்.




ராம்ஜியின் ஒளிப்பதிவில் , ரூபனின் படத்தொகுப்பில் , முத்துராஜின் கலை இயக்கத்தில் ‘வேலைக்காரன் ‘ உருவாகியுள்ளது.