அண்ணா பல்கலைக்கழகம் நான்காம் மண்டல கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பூப்பந்துப் போட்டி SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 16ல் நடைபெற்றது.

 அண்ணா பல்கலைக்கழகம் நான்காம் மண்டல கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பூப்பந்துப் போட்டி SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 16ல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குநர் கணபதி அவர்கள் வரவேற்புரையாற்றினார், வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் துனை முதல்வர் முனைவர் ம முருகன் போட்டியினை துவக்கி வைத்தார். இப்போட்டியில் மொத்தமாக 100 கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர் பிரிவில் முதல் அரையிறுதிப் போட்டியில்,SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிய 35-21,35-25, என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது, இரண்டாம் அரைஇறுதி போட்டியில் MIT கல்லூரி ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரியினை 35-23,35-19 புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. இறுதி போட்டியில் SRM வள்ளிம்மை பொறியியல் கல்லூரி MIT கல்லூரிய 35-21, 35-30, புள்ளி கணக்கில் வெற்றிபெற்று முதல் இடத்தையும், MIT இரண்டாம் இடத்தையும் மூன்றாமிடம் போட்டியில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி 35-25, 35-27, என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரியை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ம முருகன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் கணபதி ஆகியோர் வாழ்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *