கண் சிகிச்சை முகாம் ஏற்படுத்திய விழிப்புணர்வு
(30 நபர்கள் கண் தானம்)
கண் சிகிச்சை முகாம் செழுமையின் சிகரமாய் SRM வள்ளியம்மை கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த முகாம் SRM வள்ளியம்மை கல்லூரியோடு IRCS/MN கண் மருத்துவமனையும் கைகோர்த்து இணைந்து Oct 15, 2019 அன்று நடத்தப்பட்டது. இந்த முகாமில் 30 நபர்கள் தங்களது கண்களை தானம் செய்ய முன் வந்தனர். மாணவன் மனம் வைத்தால் மலையும் நகரும் என்ற வகையில் SRM வள்ளியம்மை கல்லூரியை சார்ந்த 25 செஞ்சிலுவை சங்க மாணவர்கள் பக்க பலமாக உறுதியோடு இந்த நிகழ்வை வெற்றி பெற செய்தனர். மேலும் இந்த வாய்ப்பை வழங்கி உறுதுணையாய் நின்ற SRM வள்ளியம்மை கல்லூரி நிர்வாகத்திற்கும், கல்லூரி முதல்வருக்கும் மற்றும் துணை முதல்வருக்கும், SRM வள்ளியம்மை கல்லூரி செஞ்சிலுவை சங்கத்தினர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.