சென்னை அக்.21
ஸ்கை மேன் (Sky man Forex Pvt Ltd) அன்னிய செலாவணி மற்றும் வெளிநாட்டு பணத்தை வாங்கும், விற்கும் ஸ்கை மேன் (Sky man Forex Pvt Ltd) என்ற நிறுவனம், சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோடு ஆங்கூர் பிளாசா முதல் தளத்தில் திறப்புவிழா நடைப்பெற்றது.
இத் திறப்பு விழா நிகழ்ச்சியில் மனித நேய ஜனநாயக கட்சியின்பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்கை மேன் நிறுவனத்தை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மௌலவி அல் ஹாஜி கே.எம். காஜா மொய்தீன் உமர், இமாம் மெளலவி முஜிபுர் ரஹ்மான் பாகவி , தொழிலதிபர் ஹசன் அலி ஆலிம், எம்.எம்.எச் குழுமத்தின் தலைவர் எம்.எம்.எச்.ஜமீல், எம்.எம்.எச்.முகமது ஹுசைன், எம்.எம்.எச்.சையத் முபாரக், ஜெம் மணி எக்ஸ்சேஞ்ச் உரிமையாளார் முகமது சுக்ரீ ஐ.என்.ஆர்.பி.ஏ(INRBMA ) நிலத்தரகர்கள் சங்க நிர்வாகி லயன் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.