சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (25.12.2019) கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் (Boys Club) சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் மற்றும் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால்,இ.கா.ப., சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளுக்கு கேக் வழங்கி கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அடையாறு துணை ஆணையாளர் திரு.பி.பகலவன்,இ.கா.ப., துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் திரு.லோகநாதன், சிறார் மன்ற நிர்வாகிகள் மற்றும் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.
காவல் ஆணையாளர் சிறுவர், சிறுமிகளுடன் கேக் வெட்டி கிருஸ்துமஸ் கொண்டாடினார்.
