அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ காந்தி மணிவாசகம் இயக்குகிறார்

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ காந்தி

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “ களவாணி மாப்பிள்ளை “ காந்தி மணிவாசகம் இயக்குகிறார்
 
 
 
 
 
 
 
 

                                            அட்டகத்தி தினேஷ் நடிக்கும்

                                              “ களவாணி மாப்பிள்ளை “ 

                                       காந்தி மணிவாசகம் இயக்குகிறார்

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “களவாணி மாப்பிள்ளை “ படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர்.

இசை   –  ரகுநந்தன்

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அப்பாவை பின்பற்றி தயாரிப்பு, இயக்கம் என்று களமிறங்கும் காந்தி மணிவாசகம், கதை அமைப்பிலும், காமெடி, கமர்ஷியல் என்ற அவரது அப்பா பார்முலாவையே இவரும் கையிலெடுக்கிறார்.

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *