செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுடன் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை
· இதயம் தொடர்பான நோய்கள் குறித்து மகளிர்களிடையே விழிப்புணர்வு வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது
· பெண்களை விசேஷமாகவும், அழகாகவும் உணர வைக்க ஒரு பிரத்யேக நிகழ்ச்சி நடத்தப்பட்டது
சென்னை, மார்ச் 9, 2020: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, தனது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களோடு சேர்த்து, தங்களுடைய செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றை இன்று சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் தங்கள் உடலை கவனித்துக்கொள்ளுதல், தங்கள் இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுதல் மற்றும் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் ஒட்டுமொத்த நலத்தை பராமரித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இதய நெஞ்சக கூட்டுப்பகுதி மற்றும் குருதிநாள அறுவைசிகிச்சை, இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை முதுநிலை ஆலோசகர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர். N. மதுசங்கர் அவர்கள் மற்றும் முதுநிலை ஆலோசகர் டாக்டர் ஆன்டோ சகாயராஜ் ஆர். அவர்கள் மற்றும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, மகப்பேறியல் முதுநிலை ஆலோசகர் டாக்டர். நித்யா ராமமூர்த்தி அவர்கள் கூட்ட நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
அண்மை ஆண்டுகளில் பெண்களிடையே இதயம் தொடர்பான நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. பெருகிவரும் இந்தப் போக்கை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, சர்வதேச மகளிர்தின 2020 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு அமர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த அமர்வில் பல்வேறு நல அம்சங்கள் குறித்து, குறிப்பாக இதய நலம் பேணுவது குறித்து பெண்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. பெண்கள் வாழக்கூடிய மற்றும் பணிபுரியக்கூடிய சுற்றுச்சூழல்களை தவிர்க்கமுடியாது என்பதால், சுயபாதுகாப்பு, அதாவது தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் ஒரு பழக்கத்தை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், இதனை தங்களது கடைசி முன்னுரிமையாக பெண்கள் வைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிகழ்ச்சி குறித்து டாக்டர் மது சங்கர் கூறுகையில், “பெண்களின் முக்கியத்துவத்தை கொண்டாடுவதற்காகவும் மற்றும் பெண்களின் சிறப்பையும் மற்றும் ஆற்றலையும் போற்றுவதை முன்னிட்டும் இந்நகிழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் உடல்நலம் மீது மிகவும் குறைந்த கவனத்தையே செலுத்துகிறார்கள். இதய குருதிநாள நோய் என்பது, தொன்றுதொட்டு ஆண்களுடைய நோயாக கருதப்பட்டு வந்தள்ளது மற்றும் அதிலிருந்து பெண்கள் ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால், பெரும்பாலான பெண்கள் மரணத்திற்கு இதய குருதிநாள நோயே முக்கிய காரணமாகும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, பெண்களும் ஒழுங்குமுறை தவறாமல் உடல்நல பரிசோதனை செய்துகொண்டு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பேண வேண்டியது முக்கியமாகும்,” என்றார்.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை முதன்மையான பியூட்டி சலூனான க்ரீன் ட்ரெண்ட்ஸ் உடன் கூட்டுசேர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களை விசேஷமாகவும் மற்றும் நல்லபடியாகவும் உணர வைப்பதற்காக ஒரு பிரத்யேக அழகு சிங்கார நடவடிக்கையை நடத்தியது. தங்களை கவனித்துக்கொள்வதற்கு நேரமே இல்லாமல் 24 மணி நேரமும் நோயாளிகளுக்காக பாடுபடும் செவிலியர்கள் மற்றும் பிற பெண் பணியாளர்களுக்கு தங்களை சீர்படுத்தும் அனுபவத்தை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் வெற்றிக்கு பெண்களின் பங்களிப்பை இந்நிகழ்ச்சி அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளை கவனிப்பதில் அயராது பாடுபடும் அவர்களுடைய கடினமான உழைப்பையும் மற்றும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் கௌரவிக்கிறது.