உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை,
தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்ட நிலையில்,கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் மத்திய மாநில அரசுகளுக்கு லட்சியம் வெல்லும் மாத பத்திரிகை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பாரத பிரதமரின் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவினால் ஓரளவு வைரஸ் கட்டுக்குள் வந்தாலும்,பொதுமக்கள் உள்பட பல்வேறு தொழிற்நிறுவன ஊழியர்கள் பொருளாதாரத்தில் பாதிப்படைந்துவருகின்றனர்.அவ்வகையில் லட்சியம் வெல்லும் இதழ் சமூக அக்கறையுடன் பல்வேறு வகையில் உதவிவருகிறது. இதன் தொடர்ச்சியாக 08.04.2020 இன்று திருப்பூர் மாவட்டம் லட்சியம் வெல்லும் தலைமை நிருபர் திரு.சுரேஷ் அவர்களின் பரிந்துரையில், பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவை திருப்பூர் மாவட்டம்,நிறுவன தலைவர் திரு.பசும்பொன் பாலு அவர்களின் ஏற்பாட்டில் திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு பத்திரிகையை சேர்ந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது..
இது விளம்பரத்திற்கான பதிவு அல்ல ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற சிந்தனையோடும் தான் பதிவிடபடுகிறது.
லட்சியம் வெல்லும்,
எடிட்டர்.